- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து ஒரே தப்பை செய்து இயக்குனர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் நடிகர் சூர்யா - பேசாம இவரே...

தொடர்ந்து ஒரே தப்பை செய்து இயக்குனர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் நடிகர் சூர்யா – பேசாம இவரே ஒரு டைரக்டராகி நடிக்க ஆரம்பிச்சிடுவாரோ…?

- Advertisement -

நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவின் சீனியர் நடிகரான சிவக்குமாரின் மகன். பூவெல்லாம் கேட்டுப்பார், நேருக்கு நேர் படங்களில் மிக அப்பாவித்தனமான ஒரு முகத்துடன் நடித்த அவரை பார்த்து, பிளஸ் 2 மாணவர் மாதிரி இருக்கிறார் என்று விமர்சித்தவர்களே அதிகம். கேமரா முன் நிற்கவோ, பேசவோ, நடிக்கவோ தெரியாமல் சூர்யா அந்த படங்களில் திணறியிருப்பார்.

அதன்பிறகு இயக்குனர் அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே என்ற படத்தில் நடித்தார் சூர்யா. அதில் ஒரு நடிகராக மிக சிறப்பான தன் நடிப்பை சூர்யா வெளிப்படுத்தியிருந்தார். இதில் திரிஷா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து டைரக்டர் பாலா இயக்கத்தில், நந்தா படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து தன் நடிப்பில் தனி முத்திரை பதித்தார் சூர்யா.

- Advertisement -

தொடர்ந்து சூர்யா நடித்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. நடிகர் அஜீத்குமார் சில வாரங்கள் நடித்துவிட்டு, பின் மொட்டையடித்து நடிக்க மறுத்ததால், அந்த கேரக்டரில் கஜினி படத்தில் நடித்தார் சூர்யா. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அசின் ஜோடியாக அவர் நடித்த அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் நயன்தாரவும் மிக கிளாமரான ரோலில் நடித்திருந்தார்.

அதன்பிறகு பிதாமகன், சிங்கம், வேல், சூரரைப் போற்று போன்ற ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறிய சூர்யா, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். மிகச்சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை எல்லாம் அவரே கெடுத்துக்கொண்டு வெளியேறுகிறார்.

- Advertisement -

வணங்கான் படத்தில் நடிக்க மறுத்து வெளியேறிய அவர், வாடிவாசல் படத்திலும் நடிப்பாரா மாட்டாரா என்பது கேள்வியாக இருக்கிறது. சுதா கொங்காரா படத்தில் நடிக்க மறுத்து சூர்யா வெளியேற முக்கிய காரணம், டைரக்டர் எழுதிய ஸ்கிரிப்ட்டில் நிறைய திருத்தங்களை சொன்னதுதான். கடைசியில் கதையின் போக்கையே மாற்றிவிட்ட அவரது செயலால் அந்த படம் வேண்டாம் என தீர்மானித்து விலகிவிட்டார் சுதா கொங்காரா.

இப்போது அயலான் பட டைரக்டர் ரவிக்குமார் படத்தில் சூர்யா நடிக்க இருந்த நிலையில், அவரை சந்தித்துள்ளார் ரவிக்குமார். அப்போது கதையை கேட்ட சூர்யா, இந்த கதை சரியாக வராது, வேறு மாதிரியான கதையுடன் வாருங்கள். அல்லது இந்த கதையில் நான் சொல்கிறபடி திருத்தம் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். 4 ஆண்டுகளாக எழுதிய கதையில் திருத்தமா, மாற்றமா என நொந்து போய் எழுந்து வந்திருக்கிறார் டைரக்டர் ரவிக்குமார். இப்படி டைரக்டர்களை தொடர்ந்து புறக்கணித்த சூர்யா, விஜய்க்கு கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கதையில் நடிக்க உடனடியாக ஓகே சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்