தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்துவரும் நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் கடந்த 1979-ஆம் ஆண்டு ஏழை மாணவர்களுக்காக அகரம் என்கிற கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்து உதவி செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஏழ்மை நிலையில் இருந்து மேற்படிப்பிற்கு உதவியை எதிர்பார்க்கும் ஏழை மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டையில் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த அகரம் அறக்கட்டளையின் 44-வது ஆண்டு விழா மற்றும் அகரம் அறக்கட்டளை மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகுமார் அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அகரம் அறக்கட்டளை மூலமாக பயின்று வரும் மாணவர்கள் குறித்தும் அவர்களது எதிர்காலம் குறித்தும் பலரும் வாழ்த்தி பேசியிருந்தனர்.

கடந்த 14 வருடங்களாக அகரம் அறக்கட்டளை மூலமாக 5200 மாணவர்கள் கல்வி உதவி பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த அறக்கட்டளையின் 44-வது ஆண்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய நடிகர் சூர்யா கூறுகையில் : மாற்றத்திற்கு காரணமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறக்கட்டளை 44-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது மகிழ்ச்சி. ஒருவருக்கு உதவி செய்தால் அது அனைவருக்கும் உதவியாக இருக்கும். எங்க ஆத்தா எங்க அப்பா கிட்ட சொன்னது : ஒருத்தருக்கு 120 ரூபாய் கொடுக்குற சரி, ஆனா ஒவ்வொரு வருடமும் உன்னால் கொடுக்க முடியுமா? இப்ப கொடுத்துடுவ.. தொடர்ந்து கொடுக்க முடியுமா? எவ்வளவு கொடுக்க முடியும் என்று யோசித்து விட்டு வருஷா வருஷம் கொடுக்கற மாதிரி பண்ணு என்று எங்க ஆத்தா எங்க அப்பாவிடம் சொன்னாங்க.
அப்படி சிறிய தொகையில ஆரம்பிச்சு இன்னைக்கு 44 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதனை நாங்கள் செய்து வருவதற்கு ஆத்தா காட்டிய வழிதான் காரணம் என சூர்யா நெகிழ்ச்சியாக பேசினார். அதோடு தொடர்ந்து பேசிய அவர் : தன்னலம் பார்க்காத நிறைய நபர்களின் பங்களிப்பு அகரம் மாணவர்களை உயர்த்தியுள்ளது. திருவண்ணாமலை அருகே உள்ள மலை கிராமங்களில் கூட சில ஆசிரியர்கள் மாணவர்களுக்காக அங்கேயே தங்கி பாடங்களை நடத்தி வருகின்றனர்.
‘ஒரு செயலை தொடங்குவதை விட, தொடர்வது அதீத உழைப்பை கோரும்’
ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44-ஆம் ஆண்டு நிகழ்வில் பரிசும், பாராட்டும் பெறும் மாணவ கண்மணிகளே வாழ்த்தி மகிழ்கிறோம்.#education #awardceremony #motivation #support #highereducation #bethechange #Agaram #charity #help pic.twitter.com/f6LhYKqv8c— Agaram Foundation (@agaramvision) July 16, 2023
அப்படி அர்ப்பணிப்புடன் இருக்கும் ஆசிரியர்களும் எங்களது அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த மாணவர்கள் தனித்தன்மையுடன் திகழ்கிறார்கள் என்று கூறும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏழ்மை நிலையில் இருந்து வரும் மாணவர்கள் தான் இந்த அறக்கட்டையின் மூலம் பயன்பெறுகிறார்கள். கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள். வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள். ஜாதி, மதம் அனைத்தையும் கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள்.
ஒருவர் மாறினால் ஒரு வீடு மாறும். ஒரு வீடு மாறினால் ஒரு சமுதாயம் மாறும். அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மூன்று வருடத்தில் ஒரு லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளோம். இந்த அகரம் அறக்கட்டளை தற்போது புதிதாக ஒரு கட்டிடத்தை கட்டி வருகிறது. ஜவ்வாது மலை அருகே 30 பள்ளிகளை மேம்படுத்தியுள்ளது. இப்படி தொடர்ச்சியாக எங்களது கல்வி பணி தொடர்ந்து வருகிறது.
இதுவரை 5200 மாணவர்கள் அகரத்தால் பயன்பெற்றுள்ளனர். அகரம் என்பது எங்களுடையது கிடையாது.. உங்களுடையது.. நம்முடையது.. தனியாக செயல்படுவதை விட அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுத்தால் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவியை கொடுக்க முடிகிறது. மார்க் எடுப்பது மட்டும் கல்வியல்ல வாழ்க்கைக்கும் கல்வி அவசியம் என சூர்யா பேசியது குறிப்பிடத்தக்கது.





