- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம், தங்கலான் வேறு யாருமல்ல, நான்தான் - உண்மையை...

இந்த படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம், தங்கலான் வேறு யாருமல்ல, நான்தான் – உண்மையை போட்டுடைத்த நடிகர் சியான் விக்ரம்

- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் நடிகர் விக்ரம் பேசியதாவது, அந்நியன், ஐ, பிதாமகன், ராவணன் படங்களில் நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்ததாக சொல்வார்கள். ஆனால் தங்கலான் படத்தில் நடிக்க நான் பட்ட கஷ்டங்களுடன் ஒப்பிட்டால் அதுவெல்லாம் கஷ்டங்களே இல்லை. என் நடிப்பை பற்றி நான் எப்போதுமே பெருமைப்பட்டுக்கொள்ள மாட்டேன். இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம், தரணி, ஏஎல் விஜய், பா ரஞ்சித் போன்றவர்கள் என் நடிப்பை வெளியே கொண்டு வந்தார்கள். அவர்களுக்கே அந்த பெருமை சேரும்.

சிறுவயதிலேேய நடிக்கும் ஆசை எனக்கு நிறைய இருந்தது. பள்ளியில் 3வது ரேங்கில் இருந்த நான், நடிக்க ஆசைப்பட்ட பிறகு கடைசி மூன்று ரேங்குக்குள் வந்துவிட்டேன். பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட நாடகங்களில் நடித்து என் நடிப்பு வெறியை தணித்துக்கொண்டேன். வீட்டில் இருந்தவர்கள், நடிப்பு ஆசையை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த சொன்னார்கள்.

அதற்கு பிறகு ஒரு விபத்தில் சிக்கி, 23 இடங்களில் ஆபரேசன் நடந்தது. நடக்க முடியாமல் 3 ஆண்டுகள் படுக்கையில் கிடந்தேன். என்னால் இனி நடக்கவே முடியாது என டாக்டர்கள் கூறிவிட்டனர். காலை துண்டிக்காமல் விட்டதே பெரிய விஷயம் என்றனர். என்றாலும் நான் மனசு தளரவில்லை. முதலில் இரண்டு குச்சிகளை ஊன்றி நடந்தேன். பிறகு ஒரு குச்சி ஊன்றி நடந்தேன். பிறகு என் கால்களால் நான் நடந்தேன்.

அதன்பிறகு மீண்டும் நான் சினிமா வாய்ப்பு தேடினேன். கிடைத்த வேலைக்கு சென்று வீட்டுச் செலவுக்கு பணமும் சம்பாதித்தேன். அன்றைக்கு நான் தளர்ந்திருந்தால், முயற்சியை கைவிட்டு இருந்தால் இன்று இந்த மேடையில் நான் நின்றிருக்க முடியாது. ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றால், அதற்காக தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை சினிமாவில் நான் ஜெயித்திருக்காவிட்டால், இப்போதும் முயற்சித்துக் கொண்டுதான் இருந்திருப்பேன். நடிப்பில் இருந்து விலகியிருக்க மாட்டேன்.

பொதுவான ஒரு கேரக்டரை எழுதிவிட்டு அதில்தான் என்னை நடிக்க இயக்குனர்கள் அணுகுவார்கள். நான் தங்கலான் எனக்காகவே எழுதப்பட்ட கதை. இந்த படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம், தங்கலான் நான்தான். என்னிடம் உள்ள விடாமுயற்சி, போர்க்குணம், வெறி எல்லாமே தங்கலானுக்கும் இருந்தது. அவனுடன் இருந்தவர்கள், உன்னால் முடியாது விட்டுவிடு என்று சொன்ன போதும் அவன் தொடர்ந்து தன் குடும்பத்துக்காக, மக்களுக்காக போராடினான். என்னையே தங்கலான் பிரதிபலித்தான் என, விக்ரம் பேசியிருக்கிறார்.

சற்று முன்