- Advertisement -
Homeபொழுதுபோக்குகடும் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர் தாடி பாலாஜி, தவெக தலைவர் விஜய் இதை கண்டிப்பாரா? -...

கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர் தாடி பாலாஜி, தவெக தலைவர் விஜய் இதை கண்டிப்பாரா? – விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

சினிமா நடிகராக வந்த சில கலைஞர்கள், நடிப்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற நிலையில், தங்களை உருவாக்கி கொள்ளாதவர்கள். தன் பாலிசி இதுதான் என்று ரசிகர்களுக்காக தன் கொள்கைகளை வகுத்துக் கொண்டவர்கள். தன்னை பின்பற்றும் ரசிகர்கள், நாளை அதே தவறுகளில் அவர்களும் ஈடுபடக் கூடாது என்று நினைப்பவர்கள்.

அதனால்தான் நடிகர் எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் அவர் சிகரட் பிடிப்பது போல, மதுபானம் அருந்துவது போல நடித்தது இல்லை. அதே போல், நடிகர் டி ராஜேந்தா், தன்னுடன் ஜோடியாக நடிக்கும் நடிகைகளை தொடாமல் நடித்தவர். முக்கியமாக நடிகர் ராமராஜன், எந்த படத்திலும் புகை பிடிப்பது போல, மதுபானம் அருந்துவது போல நடித்தது இல்லை.

- Advertisement -

ஒருமுறை இயக்குனர் வெங்கட்பிரபு, ராமராஜனை தன்னுடைய படத்தில் நடிக்க அழைத்து, அதிக சம்பளம் தருவதாக கூறிய போது, படத்தின் பார்ட்டி என்பதால் சுதாரித்துக்கொண்ட ராமராஜன், சிகரட் பிடிப்பது, மதுபானம் அருந்துவது அதுபோன்ற கேரக்டரில் நடிக்க மாட்டேன் என தவிர்த்திருக்கிறார். அந்தளவுக்கு சில நடிகர்கள், ரசிகர்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக உள்ளனர்.

ஆனால் ரஜினி, விஜய், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் பல படங்களில் சிகரட் பிடிப்பதை, மதுபானம் அருந்துவதை தங்களது கேரக்டர்களாகவே கொண்டு நடித்திருக்கின்றனர். இப்போது நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக உள்ள நிலையில், அந்த கட்சியை சேர்ந்த நடிகர் தாடி பாலாஜி, தனது நெஞ்சில் விஜய் உருவத்தை பச்சை குத்தி, என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற வாசகத்தை எழுதியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறுகையில், சமீபத்தில் நடிகர் அஜீத்குமார் ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு, தன்னை பொது இடங்களில் கடவுளே அஜீத்தே என கோஷமிடக் கூடாது என எச்சரித்தார். அதே போல் தெலங்கானாவில் புஷ்பா 2 படம் திரையிட்ட தியேட்டரில் நெரிசலில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தார்.

அதற்கு படத்தின் ஹீரோ அல்லு அர்ஜூன் நேரடியாக காரணமில்லை என்றாலும், அவரும் அங்கு படம் பார்க்க சென்றது தவறு என்பதால் அவரை கைது செய்து மற்றவர்களுக்கு அரசு எச்சரிக்கை செய்திருப்பது நல்ல விஷயம். ஆனால் நடிகர் விஜய் கட்சி சார்ந்த தாடி பாலாஜி செய்திருப்பது, தவறான மூட பழக்கம். இதை விஜய் கட்சி சார்ந்த மற்ற தொண்டர்களும் செய்ய நினைப்பார்கள். இதுகுறித்து தவெக தலைவர் விஜய், தாடி பாலாஜியை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்