- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் கட்சியில் இணைந்த பிரபல காமெடி நடிகர், கட்சிக் கொடியுடன் கோவிலில் சிறப்பு பூஜை...

நடிகர் விஜய் கட்சியில் இணைந்த பிரபல காமெடி நடிகர், கட்சிக் கொடியுடன் கோவிலில் சிறப்பு பூஜை – விரைவில் பொறுப்பு வழங்கவும் வாய்ப்பு!

- Advertisement -

நடிகர் விஜய் தி கோட் படத்தை தொடர்ந்து இப்போது தனது 69வது படத்தில் நடிக்க துவங்கி விட்டார், நேற்று முன்தினம் தளபதி 69 படத்தின் பூஜை நடந்த நிலையில், நேற்று பையனூரில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தொடர்ந்து பாடல் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். பீஸ்ட் படத்தில் நடித்த நாயகி பூஜா ஹெக்டே இந்த படத்தில் 2வது முறையாக விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

தனது 69வது படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், ஒரு மாதத்தில் 20 நாட்கள் ஷூட்டிங், 10 நாட்கள் கட்சிப் பணி என திட்டமிட்டுள்ளார். வழக்கமாக தினமும் மாலை 6 மணிக்கு பிறகு படப்பிடிப்பை தவிர்ப்பதும், வாரந்தோறும் ஞாயிறு தினத்தில் பிரேக் எடுப்பதும்தான் விஜயின் வழக்கம். ஆனால் இந்த முறை தனது ஷூட்டிங்கில் இந்த மாற்றத்தை விஜய் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வருகிற 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் அரசியல் மாநாடு நடக்க உள்ளது. அதற்கான பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறது, இரு தினங்களுக்கு முன் மாநாட்டு பணிக்கான பந்தல் கால் நடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல், விஜய் தனது புதிய படத்தின் பூஜையில் பங்கேற்றது சர்ச்சையாகி வைரலானது.

இதற்கிடையே பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து விஜயுடன் பணியாற்ற உள்ள புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வருபவர் தாடி பாலாஜி. விஜய், அஜீத்குமார், தனுஷ், சூர்யா, கார்த்தி என பல முன்னணி ஹீரோக்களுடன் காமெடி ரோலில் நடித்திருக்கிறார். விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். காமெடி ஷோவிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

- Advertisement -

நடிகர் விஜயுடன் சச்சின், துள்ளாத மனமும் துள்ளும், நிலாவே வா, லவ் டுடே, சுறா, தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நேற்று கோவிலுக்கு தவெக கட்சிக் கொடியுடன் வந்த தாடி பாலாஜி, கொடியை வைத்து பூஜை செய்தார். கட்சி நிர்வாகிகளும் அவருடன் இருந்தனர். நடிகர் விஜய் மற்றும் கட்சி மாநாடுக்காக அந்த கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

இதுகுறித்து பேசிய நடிகர் தாடி பாலாஜி, சில தினங்களுக்கு முன் தவெக கட்சி பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த், என்னை நேரில் அழைத்து கட்சி மாநாடு பணிகளை செய்யுமாறு கூறினார். விஜய் என்னை கட்சி பணி செய்யுமாறு கூறியதாக தெரிவித்தார். இது பெரிய மகிழ்ச்சியை எனக்கு தந்துள்ளது. ஒருவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்க வேண்டும். என்ன தெரியும் என்று விமர்சிக்க கூடாது. விஜய் அமைதியாக இருந்து, 2026ல் பதில் சொல்வார், என்றார். விரைவில் தாடி பாலாஜிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்