- Advertisement -
Homeபொழுதுபோக்குட்ரெயின் படம் ஷூட்டிங்கை அப்படியே கிடப்பில் போட்ட தயாரிப்பாளர், அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?...

ட்ரெயின் படம் ஷூட்டிங்கை அப்படியே கிடப்பில் போட்ட தயாரிப்பாளர், அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா? – ஆனாலும் புத்திசாலித்தனமான முடிவுதான்!

- Advertisement -

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் மிக முக்கியமானவர் கலைப்புலி எஸ் தாணு. இவர் பல முன்னணி நடிகர்கள் நடித்த வெற்றிப் படங்களை தயாரித்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பே லட்சங்களில் படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மத்தியில், பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் படங்களில் தயாரித்த பெரிய தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ட்ரெயின் என்ற படத்தை தயாரித்து வருகிறார். மேட்டுப்பாளையம் – சென்னை வரும் கோவை ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய கதை தான் இந்த ட்ரெயின் படம். இதில் கேமியோ ரோலில் இயக்குனர் வெற்றிமாறன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீபத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மகாராஜா படத்துக்கு பிறகு, விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் ட்ரெயின் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போது இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்த்துள்ளனர்.

ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் ட்ரெயின், ரயில்வே ஸ்டேஷன் ஷெட் போட்டு பல மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பிறகு, மேட்டுப்பாளையத்திலும் சில தினங்கள் படப்பிடிப்பு நடந்தது. இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது. ஆனால், அந்த 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்த வேண்டாம். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தயாரிப்பாளர் எஸ் தாணு கூறிவிட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கு காரணம், இன்னும் 20 தினங்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டால் படம் ரிலீஸ் தேதி அறிவிக்க வேண்டும். ஆனால் இப்போதைய சூழலில் டிஜிட்டல், சேட்டிலைட் விலை இந்த படத்துக்கு சாதகமானதாக இல்லை. அதனால் சேட்டிலைட், டிஜிட்டல் ரைட் விலை அதிகரிக்கும் வரை காத்திருந்து படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டுள்ளார்.

மேலும் கிச்சா சுதீப் ஹீரோவாக நடிக்கும் பெரிய பட்ஜெட் படம் ஒன்றையும் எஸ் தாணு இப்போது தயாரிக்கிறார். அதற்காகவும் பெரிய அளவில் அவர் பணத்தை முதலீடு செய்துள்ளார். அதனால் ஒரே நேரத்தில் 2 படங்களையும் தயாரிக்கும் செலவினம் காரணமாகவும் தாணு, ட்ரெயின் படத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் ட்ரெயின் படத்தின் மீதமுள்ள 20 நாட்கள் படப்பிடிப்பு எப்போது மீண்டும் துவங்கும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்