- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அவ்வளவு சொல்லியும் ஏஆர் முருகதாஸ் கண்டுக்கலே… இல்லேன்னா இப்போ தல என் மகன்தான் -...

நான் அவ்வளவு சொல்லியும் ஏஆர் முருகதாஸ் கண்டுக்கலே… இல்லேன்னா இப்போ தல என் மகன்தான் – ஓபனாக சொன்ன நடிகர் தியாகராஜன்!

- Advertisement -

தீனா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ். அஜீத்குமார் நடித்த தீனா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில்தான் அஜீத்குமார் தல என அழைக்கப்பட்டார். அதன்பிறகு அந்த பெயரே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நிலைத்து விட்டது. தல என்றால் அது அஜீத்குமார் என்று அடையாளமாகி விட்டது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தீனா படத்தின் வெற்றியை தொடர்ந்து கஜினி ரமணா ஏழாம் அறிவு துப்பாக்கி கத்தி சர்கார் என பல வெற்றிப் படங்களை கொடுத்தார். ஆனால் கடைசியாக அவரது இயக்கத்தில் இந்தியில் வெளியான சிக்கந்தர் தமிழில் வெளியான தர்பார் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் மதராஸி படம் ஓரளவுக்கு வணிக ரீதியான வரவேற்பை பெற்றது.

- Advertisement -

கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் தியாகராஜன். கொம்பேறி மூக்கன் தீச்சட்டி கோவிந்தன் நீங்கள் கேட்டவை மலையூர் மம்பட்டியான் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். சில படங்களில் வில்லனாகவும் நடித்தவர். இப்போது திரைப்பட தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருக்கிறார்.

இவரது மகன் தான் நடிகர் பிரசாந்த் என்பது பலரும் அறிந்த விஷயம்தான். நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான அந்தகன் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தியாகராஜன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரசாந்த் வளரும் நடிகராக இருந்த காலகட்டத்தில் அவரது கால்ஷீட் கதை கேட்கும் பொறுப்புகளையும் தியாகராஜன்தான் கவனித்துக்கொண்டார். இன்று வரை அது தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தியாகராஜன் கூறியதாவது, ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் படம் தீனா. அப்போது பிரசாந்த் சில படங்களில் இரவு பகலாக நடித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் என்னிடம் வந்த ஏஆர் முருகதாஸ் தீனா கதை பற்றி சொன்னார். நான் என் மகன் சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். 2 நாட்கள் மட்டும் பொறுங்கள். அவர் வந்தவுடன் பேசி முடிவு செய்து விடலாம் என்று சொன்னேன்.

ஆனால் அவர் அதை கேட்கவில்லை. இல்லை சார். நான் உடனடியாக ஆரம்பித்தாக வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார். அப்புறம் அவர் தீனா படத்தை அஜீத்தை ஹீரோவாக வைத்து ஆரம்பித்து விட்டார். நான் 2 நாள் மட்டுமே காத்திருக்க சொன்னேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. அதற்குள் அவர் தீனா படத்தை எடுக்க போய் விட்டார் என்று நடிகர் தியாகராஜன் கூறியிருக்கிறார். ஒருவேளை அந்த படத்தில் பிரசாந்த் நடித்திருந்தால் அஜீத்குமாருக்கு பதிலாக பிரசாந்துக்கு தல என்ற பட்ட பெயர் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்