- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் கிராமத்து சார்ந்த கதையை கையில் எடுத்த நடிகர் சூரி... படத்தின் டைட்டிலை கேட்கும் போதே...

மீண்டும் கிராமத்து சார்ந்த கதையை கையில் எடுத்த நடிகர் சூரி… படத்தின் டைட்டிலை கேட்கும் போதே உணர்ச்சி பொங்குதே… அப்போ ஸ்டார்டிங்கே சக்சஸ் தான் போங்க…

- Advertisement -

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்து பரோட்டா காட்சியின் மூலம், ஃபேமஸ் ஆனவர் சூரி. அங்கிருந்து ஆரம்பித்த அவரது பயணம், பல வெற்றிகளை குவித்து வந்தது. சொல்லப்போனால் முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து கலக்கினார் சூரி. இடையே சிறு சறுக்களையும் அவர் சந்தித்தார்.

 

- Advertisement -

அவரின் காமெடி ஒரே ரகமாக இருப்பதாகவும், சுத்தமாக எடுபடவில்லை என்றும், ஆங்கிலத்தை தவறாக கூறினால் அது காமெடி என்று எண்ணுவதாகவும் பலர் சாட ஆரம்பித்தனர். இப்படியான நேரத்தில் தான், சூரியை கதாநாயகனாக்கும் திட்டத்தில் இறங்கி அவருக்கு வாய்ப்பையும் கொடுத்தார் இயக்குனர் வெற்றிமாறன்.

 

- Advertisement -

விடுதலை திரைப்படத்தை எடுக்க, அதன் முதல் பாகத்தை சூரிக்காக மட்டுமே உருவாக்கினார் வெற்றிமாறன். இதில் குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் காவலராக வந்த சூரி, தனது நடிப்பின் மூலம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவருக்குள் இப்படி ஒரு கைதேர்ந்த நடிகன் இருக்கிறானா என்று பலரும் வியந்து போயினர்.

 

எந்த இடத்திலும் சூரி என்பதே தெரியாமல் குமரேசன் ஆகவே அவர் வந்து போனார். அந்த ஒரே ஒரு படத்தின் மூலம் சூரி காட்டிய நடிப்பு, ஒட்டுமொத்த தமிழ் திரை உலகையும் பேச வைத்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஹீரோவாகும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் அவர் இரண்டாவதாக தேர்ந்தெடுத்து நடித்த கதை தான் கருடன்.

 

வெற்றிமாறனின் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இதன்பிறகு அவரது நடிப்பில், கொட்டு காளி திரைப்படமும் வெளியானது. பி எஸ் வினோத்குமார் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் சூரியின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள்.

 

இப்படியான சூழலில்தான் சூரி அடுத்ததாக மீண்டும் ஒரு கிராமத்து கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். விலங்கு வெப் சீரிஸ் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் தான் இந்த படத்தை எடுக்க உள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி சூரிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு மாமன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறவுகளின் உன்னதத்தை இந்த திரைப்படம் எடுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்