- Advertisement -
Homeபொழுதுபோக்குபார்லிமென்ட் தேர்தலில் நடிகர் வடிவேலு போட்டி?, சில தினங்களாக வைரலாகும் தகவல், இது உண்மையா,...

பார்லிமென்ட் தேர்தலில் நடிகர் வடிவேலு போட்டி?, சில தினங்களாக வைரலாகும் தகவல், இது உண்மையா, உருட்டா? – வடிவேலு சொன்ன பதில்…!

- Advertisement -

நடிகர் வடிவேலு, அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறார். மாமன்னன் படத்தில் நடித்த போது, அந்த கேரக்டரில் அவரது பக்குவப்பட்ட நடிப்பை பார்த்து பாராட்டாதவர்கள் யாருமே இல்லை. அந்தளவுக்கு தனது பழைய காமெடி நடிப்பு உடல் மொழியை அவர் காட்டாமல் நடித்தது பெரிய சாதனையாக இருந்தது.

ஆனால் அதன்பிறகு அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த பல படங்கள், அதே போன்ற கேரக்டர்களாக இருந்ததால், அட போங்கய்யா, இந்த மாதிரியே அழுவாச்சி கேரக்டரில் நடிச்சா எனக்கே போரடிச்சிடும், ரசிகர்கள் பார்ப்பார்களா, என மறுத்து, தேடி வந்த அந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து விட்டார்.

- Advertisement -

இந்த சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவின் போது, வடிவேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. அதே நேரத்தில் ஒரு இரங்கல் செய்தியாவது சமூக வலைதளங்களிலோ அல்லது பத்திரிகைகள் வாயிலாக ஒரு இரங்கல் அறிக்கையோ வெளியிட்டு இருக்கலாம் என பலரும் வடிவேலுவை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதற்கு நடுவே வடிவேலு உடன் நடித்த சக நடிகர், நடிகைகள் வடிவேலு குறித்து கடுமையான விமர்சனங்களை செய்தனர். தயாரிப்பாளர் அதிக சம்பளம் தர முன்வந்தாலும், வடிவேலு ரூ. 1500க்கு மேல் கொடுக்க விடமாட்டார். அவர் விரும்பும் நடிகர்களுக்கு தான் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுப்பார். மற்றவர்களுக்கு வாய்ப்பு தர விட மாட்டார்.

- Advertisement -

அதே போல் விவேக், சந்தானம் போன்ற பிற காமெடி நடிகர்களுடன் நடிக்க சென்றுவிட்டால், திரும்ப வந்தால் வடிவேலு மீண்டும் அவர்களை தன்னுடன் சேர்த்துக்கொள்ள மாட்டார் என்றும் புகார் கூறுகின்றனர். வடிவேலு சில விஷயங்களில் மனிதாபிமானமே இல்லாமல் நடந்துக்கொள்வார் என்று விமர்சித்து வருகின்றனர்.

இப்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிற நிலையில், திமுக சார்பில் வடிவேலு ஒரு தொகுதியில் நிற்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் எந்த தொகுதி என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சில தினங்களாக தகவல் தீயாக பரவி வருகிறது. இதுகுறித்து பதிலளித்த நடிகர் வடிவேலு, இந்த தகவல் உண்மை இல்லை. நான் நடிப்பில் மட்டுமே இப்போது கவனம் செலுத்தி வருகிறேன், என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்