தமிழ் சினிமா நடிகர்களில் அஜீத்குமார் தீவிரமான கார் பிரியர். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மோட்டார் பைக் மீது அதிக காதல் கொண்டிருந்த அவர் பல பைக் ரேஸ்களில் கலந்துக்கொண்டார். இப்போது கார் பந்தயங்களில் கலந்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான லக்ஸரி கார் ஒன்றை அவர் வாங்கியிருந்ததும் இணையத்தில் வைரலானது.
அஜீத்குமாரை போலவே நடிகர் விஜய்க்கும் கார் என்றால் ரொம்ப பிரியம். நிறைய கார்களை அவரும் வாங்கி பயணித்து வருகிறார். ஆனால் அவர் ரேஸ் பிரியர் கிடையாது. லக்ஸரி கார்களில் பயணிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். இப்போது தவெக சுற்றுப்பயணத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பஸ் போன்ற வாகனத்தில் விஜய் பயணிப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் சிம்பு விஷால் சூர்யா என பலரும் கார் பிரியர்களாக தான் இருக்கின்றனர். விதவிதமான வெளிநாட்டு கார்களை வாங்கி அதில் பயணித்து வருகின்றனர். அதிக விலை கொண்ட சொகுசு கார்களை அவர்களை பயன்படுத்துவது சினிமா நட்சத்திரங்களாக ஸ்டேட்டஸ்சையும் மெயின்டெய்ன் செய்வதற்காக தான் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.
நடிகர் வடிவேலு கடந்த 1990களில் முன்னணி காமெடி நட்சத்திரமாக இருந்தார். 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடித்து வருகிறார். மாமன்னன் மாரீசன் போன்ற படங்களில் அவரது குணச்சித்திர நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால் இனி அவர் கேரக்டர் ரோலில் அதிகமாக நடிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் காமெடி நடிப்பு ரசிகர்களிடம் எடுபடவில்லை.
இப்போது ரீ என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் வடிவேலு, முன்பு போல தினசரி சம்பளம் வாங்குவதில்லை. முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ரூ. 15 லட்சம் வரை சம்பளமாக வாங்கிக்கொண்டு இருந்தார். இப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம், கேரக்டர், கால்ஷீட்டை பொருத்து ரூ. 5 கோடி முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
அதனால் சமீபமாக பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களை தொடர்பு கொண்டு புது மாதிரியான லேட்டஸ்ட் கார் என்னென்ன வந்திருக்கிறது? தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பயன்படுத்தும் லக்ஸரி கார்கள் என்னென்ன என்று விசாரித்து தனக்கும் அதுபோன்ற கார்களை வாங்க வடிவேலு ஆர்வம் காட்டி வருகிறார். சும்மா கெத்தா போய் ஷூட்டிங் ஸ்பாட்டுல இறங்குனா தான் பீல்டில் நம்ம இமேஜ் வேற லெவலா இருக்கும் என்றும் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் வடிவேலு கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.





