- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் மனதை விட்டு மறையாத கேப்டன் விஜயகாந்த் - தன் கணவருக்காக மனைவி பிரமேலதா செய்த...

மக்கள் மனதை விட்டு மறையாத கேப்டன் விஜயகாந்த் – தன் கணவருக்காக மனைவி பிரமேலதா செய்த அந்த விஷயம்…. – ரசிகர்கள் நெகிழ்ச்சி

- Advertisement -

மதுரையில் எம்ஜிஆர் ரசிகராக இருந்து, நடிகராக ஆசைப்பட்டு தன் நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் சென்னைக்கு வந்தவர் விஜயராஜ். பிறகு விஜயகாந்த் ஆக மாறி, சின்ன சின்ன ரோல்களில் நடித்து, பின் ஹீரோவாக மாறி, வெற்றிப் படங்களை கொடுத்தவர் விஜயகாந்த்.

பிறகு படிப்படியாக முன்னேறி அம்மன் கோவில் கிழக்காலே, புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன், ரமணா என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றதோடு ஆளுமை மிக்க ஒரு தலைவராகவும் விஜயகாந்த் உருவானார். அதுதான் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக, வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தார். அதுமட்டுமின்றி 1.70 கோடி ரூபாய் சங்க இருப்பிலும் வைத்தார்.

- Advertisement -

விஜயகாந்த்தை பொருத்தவரை, திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவரே அவர்தான். ஆர்கே செல்வமணி, ஆர்வி உதயகுமார், ஆபாவாணன் என 40க்கும் மேற்பட்ட திரைப்பட கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவுக்குள் வர காரணமாக இருந்தவரே கேப்டன் விஜயகாந்த் தான். அதனால், திரைப்பட கல்லூரிக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.

தேமுதிக கட்சியை துவங்கிய விஜயகாந்த், அப்போது இருந்த கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு அரசியல் ஆளுமைகளை எதிர்த்து பிரசாரம் செய்தது, அவர்களுக்கு எதிராக ஓட்டுகளை பெற்று, எதிர்கட்சி தலைவராக சட்டசபையில் அமர்ந்தது எல்லாம் மிகப்பெரிய சாதனையாக இன்றும் பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் அவரது துணிச்சல்தான்.

- Advertisement -

ஆனால் காலத்தின் கோலமாக, நோயின் பிடியில் சிக்கிய அவர் ஒரு கட்டத்தில் செயல்படாமல் முடங்கிப் போனார். ஆறேழு ஆண்டுகளாக, ஒரு நோயாளியாக அவரை பாதித்த நோய்களுடன் அவர் கடுமையாக போராடினார். சினிமாவில், அரசியலில் தீமைகளை எதிர்த்து போராடிய அவர், தனது சொந்த வாழ்வில் நோய்களுடன் எதிர்த்து நின்று போராடி ஒரு கட்டத்தில் உயிர் நீத்தார்.

இந்நிலையில் தன் கணவர் மீது தீராத அன்பு கொண்ட பிரேமலதா விஜயகாந்த், அவரது உருவ படத்தை தனது கையில் டாட்டூ வாக வரைந்துள்ளார். அவரது கையில், விஜயகாந்த் இருப்பதை பார்த்து, கேப்டன் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் நெகிழ்ந்து போய் உள்ளனர். இப்போது தேமுதிக பொதுச் செயலாளராக உள்ள பிரேமலதா, விரைவில் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலை குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்