- Advertisement -
Homeபொழுதுபோக்கு24 ஆண்டுகளாக காலணி அணியாத தெலுங்கு நடிகர் ராம்சரண்… ஆன்மீக வழியில் இப்படி ஒரு இளம்...

24 ஆண்டுகளாக காலணி அணியாத தெலுங்கு நடிகர் ராம்சரண்… ஆன்மீக வழியில் இப்படி ஒரு இளம் நடிகரா? – அசந்து போன ரசிகர்கள்!

- Advertisement -

சினிமா என்பதே கேளிக்கை தான். பொழுதை போக்கவும் மகிழ்ச்சியாக நாளை கழிக்கவும்தான் ரசிகர்கள் சினிமா பார்க்கின்றனர். ஆனால் அந்த சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் ஒரு சிலர் மட்டும் அந்த சினிமாவை ஒரு இறைவடிவாக பார்க்கின்றனர். செய்யும் தொழிலே தெய்வம் என்ற கோணத்தில் சினிமாவை போற்றுகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. அவரது மகன் ராம்சரண். இளம் நடிகர். இயக்குனர் ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் பாலையாவுடன் இணைந்து நடித்திருந்தார். மாவீரன் கேம்சேஞ்சர் படங்களிலும் சிறந்த நடிப்பை தந்திருந்தார்.

- Advertisement -

வருகிற ஏப்ரல் 30ம் தேதி அவர் நடித்த பெத்தி என்ற பான் இந்தியா படம் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே ஒரு மகள் உள்ள நிலையில் நடிகர் ராம்சரணுக்கு சமீபத்தில் இரட்டை பிள்ளைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. அப்பா சிரஞ்சீவியை போலவே ராம்சரணும் தென்னிந்திய சினிமாவில் ஒரு நட்சத்திர நடிகராக வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக சினிமா ஷூட்டிங் மற்றும் திருமண விழாக்கள் விருது விழாக்களுக்கு வரும் நடிகர் ராம்சரண் கால்களில் காலணி அணியாமல் வருகிறார். செப்பல்ஸ் அல்லது ஷூ பூட்ஸ் எதுவும் அணியாமல் அவர் வருவது அங்கு வரும் சக நடிகர் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இப்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. நடிகர் ராம்சரண் மிக தீவிரமான ஐயப்ப சுவாமி பக்தர். கடந்த 24 ஆண்டுகளாக அவர் அய்யப்ப தீட்சை விரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த விரதம் மேற்கொள்ளும் 41 நாட்களில் நடிகர் ராம்சரண் கால்களில் காலணி அணிவது இல்லை. சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்கிறார். தரையில் படுத்து தூங்குவது, காலை மாலை பூஜை இறைவழிபாடு என ஆன்மிகத்தில் ஈடுபடுகிறார்.

நடிகர் ராம்சரண் கடந்த 24 ஆண்டுகளாக இந்த 41 நாட்கள் அய்யப்ப தீட்சை விரத முறையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பா மிகப்பெரிய கோடீஸ்வரர். அள்ள அள்ள குறையாக சொத்துக்களுக்கு வாரிசு ராம்சரண் தான். அவரும் ஒரு பெரிய நடிகராக வலம் வரும் நிலையில் தன் குடும்பம் மனைவி பிள்ளைகள் மற்றும் தனது பெற்றோர் நலனுக்காக இப்படி விரதம் இருந்து கடவுளை வழிபடும் நடிகர் ராம்சரண் குறித்து அவரது ரசிகர்கள் பெருமிதப்படுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்