- Advertisement -
Homeபொழுதுபோக்குதினமும் நாட்டுல என்னென்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியணும், அதுக்கு இந்த விஷயங்களை அனலைஸ் பண்ணி பாருங்க...

தினமும் நாட்டுல என்னென்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியணும், அதுக்கு இந்த விஷயங்களை அனலைஸ் பண்ணி பாருங்க – கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் மாணவர்களுக்கு அட்வைஸ்!

- Advertisement -

நட்பபாண்டில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுடன் கல்வி விருது வழங்கும் விழா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் இன்று நடந்து வருகிறது. கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசுகளை இப்போது வழங்கி வருகிறார்.

கடந்தாண்டில் ஒரே நாளில் இந்த விழாவை நடத்திய நிலையில், இந்த முறை இரண்டு கட்டங்களாக இந்த விழா நடத்தப்படுகிறது. இன்று முதல்கட்டமாக 21 மாவட்டங்களுக்கும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு வரும் ஜூலை 3ம் தேதி இதே போல் விழா நடத்தி ரொக்கப் பரிசுகளுடன், கல்வி விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

- Advertisement -

இன்றைய விழாவின் துவக்கத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, நீங்கள் படிக்கும்போதே மறைமுகமாக அரசியலில் ஈடுபட முடியும். அது ரொம்ப ஈஸிதான். நீங்கள் இந்த செய்திதாள்களை படித்தாலே புரிந்துவிடும். ஒரே செய்தியை ஒரு செய்திதாளில், ஒரு மாதிரி எழுதுவாங்க. அதே செய்தியை மற்றொரு செய்திதாளில் வேறு மாதிரி எழுதுவாங்க.ஒரு செய்தியை. ஒரு செய்திதாளில் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக போடுவாங்க. அந்த செய்தியை ஒரு செய்திதாளில் கடைசி பக்கத்தில் கூட போட மாட்டாங்க.

செய்தி வேற கருத்து வேற உங்களுக்கு தெரிய வரும். சோஷியல் மீடியாவில் நிறைய நல்லது கெட்டது குறித்து ஒபினீயன் பேசறாங்க. அதை நீங்க கவனித்து பார்த்தால் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும், நல்லவங்களை கெட்டவங்களாகவும், கெட்டவங்களை நல்லவங்களாகவும் காட்டுவதை, இந்த புறணி பேசறதை எல்லாம் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

- Advertisement -

ஆனால் நீங்க இதை எல்லாமே பாருங்க, எல்லா செய்திகளும் படிங்க. ஆனால் இது பொய் எது, உண்மை எது என்பதை மட்டும் அலசி ஆராய்ந்து தெரிஞ்சுக்க கத்துக்குங்க. அதுதான் ரொம்ப முக்கியம். அப்போதுதான் உண்மையில் நாட்டில் என்ன பிரச்னை, நாட்டு மக்களுக்கு என்ன பிரச்னை, இந்த சமூக தீமைகள் பற்றி எல்லாம் உங்களுக்குத் தெரிய வரும்.

இதை எல்லாம் தெரிந்துக்கொண்டாலே, சில அரசியல் கட்சிகள் செய்கிற இந்த பொய்யான பிரசாரங்களை எல்லாம் நம்பாமல், இதுல எது சரி, எது தப்பு, எது உணமை, எது பொய் அப்படீன்னு அனலைஸ் பண்ணி பார்த்துட்டு, நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கிற ஒரு விசாலாமான உலக பார்வை உங்களுக்கு தானாகவே வந்துவிடும். அது வந்துட்டாலே, அதை விட ஒரு சிறந்த அரசியல் இருக்காது. நம் நாட்டுக்கு நீங்கள் செய்கிற சிறந்த பங்களிப்பாகவும் அது இருக்கும், என்று பேசியிருக்கிறார் நடிகர் விஜய்.

- Advertisement -

சற்று முன்