- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்மேல உண்மையான அன்பு இருந்தா இனி இப்படி நடந்துக்காதீங்க… தன் கட்சி தொண்டர்களுக்கு கோபமாக அட்வைஸ்...

என்மேல உண்மையான அன்பு இருந்தா இனி இப்படி நடந்துக்காதீங்க… தன் கட்சி தொண்டர்களுக்கு கோபமாக அட்வைஸ் செய்த தவெக தலைவர் விஜய்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பதவில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர் தோழியர் அனைவருக்கும் வணக்கம். 3 தினங்களுக்கு முன் கோவையில் நடந்த நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்.ஐ லவ் யூ கோவை அண்ட் கோவை தங்கம்ஸ்.

நம் மீது இத்துணை அன்பை காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும் உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்பு காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றி காட்டுவோம்.

- Advertisement -

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்பு கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. நம்முடைய இளைய தோழர்கள் நமது வாகனங்களை இருசக்கர வாகனங்களில் கவசம் இன்றி வேகமாக பின் தொடர்வது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன.

அதனால் இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன். நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதற்கு வழிய சரி பண்ணிவிட்ட உங்கள் செயலை பாராட்டியே ஆகணும். அதுதான் நீங்க… இப்படி எல்லாம் செய்ற நீங்க அன்பின் காரணமாக செய்யற சிலதையும் சொல்லி ஆகணும் உங்களுடைய அன்பு புரிஞ்சுக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ். அதுக்கு நான் தலைவணங்கவும் செய்தேன். ஆனால் எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்தும் விதம் அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாக தான் இருக்கணும்.

- Advertisement -

எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கதான் எனக்கு விலைமதிப்பற்றவர்கள். இவ்வளவு அன்போடு இருக்கிற நீங்க எனக்கு கிடைத்ததற்கு நான் என்ன தவம் செய்தேன்னு எனக்கு தெரியல. உங்களை நான் கை கூப்பி தலைவணங்கி கேட்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்.உங்க அன்பை நான் மதிக்கிறேன். இனி எப்பவும் மதிப்பேன் அதுபோல நீங்களும் என் மேல் அன்போட இருக்கிறது உண்மைனா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது.

நான் இங்கே சொல்லி இருக்கிற மாதிரி இதை நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாக கூட எடுத்துக்கோங்க. தப்பே இல்ல. நம் அரசியலில் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோட கண்டிப்பும் டிசிபிலினும் 100 சதவீதம் சமரசம் அற்றதாகத்தான் இருக்கணும் பிரண்ட்ஸ். அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லது என்று உங்களுக்கே தெரியும். இனி அடுத்தடுத்து நம் மக்களை சந்திக்கிற நிகழ்ச்சிகள் எல்லாம் இருக்கிறதால் நான் சொல்றதை நீங்க இனிமேல் ஸ்டிரிக்டா பாலோ செய்வீங்கன்னு நம்புறேன். செய்வீங்க செய்யறீங்க… ஓகே என்று நடிகர் விஜய் அந்த எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்