- Advertisement -
Homeபொழுதுபோக்குஒட்டுமொத்தமாக குறை சொல்ல முடியாது, வீணாப் போன அந்த 4 பேர் செய்த தவறு -...

ஒட்டுமொத்தமாக குறை சொல்ல முடியாது, வீணாப் போன அந்த 4 பேர் செய்த தவறு – வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் ஆண்டனி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் விஜய் ஆண்டனி. வேட்டைக்காரன் நான் அவன் இல்லை காதலில் விழுந்தேன் டிஸ்யூம் மரியாதை வெடி வேட்டைக்காரன் வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர். இதில் பல பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நான் என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் ஆண்டனி தொடர்ந்து சலீம் பிச்சைக்காரன் பிச்சைக்காரன் 2 திமிரு புடிச்சவன் அண்ணாதுரை ரோமியோ சைத்தான் எமன் கோடியில் ஒருவன் இந்தியா பாகிஸ்தான் தமிழரசன் என பல படங்களில் நாயகனாக நடித்து முன்னணி நடிகராக மாறினார்.

- Advertisement -

இதில் பிச்சைக்காரன் திமிரு புடிச்சவன் போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன. ஆக்சன் படங்களில் விஜய் ஆண்டனி நடிப்பு சிறப்பாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் பிச்சைக்காரன் கேரக்டரில் அவர் நடித்திருந்தது பெரிய அளவில் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.

குறிப்பாக முருகவேல் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் திமிரு புடிச்சவன் படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக விஜய் ஆண்டனி நடிப்பு அழுத்தமாக இருந்தது. சிறார் குற்றவாளியான தன் தம்பியை அவரே சுட்டுக்கொல்வது, சிறார் குற்றவாளிகளின் தலைவனாக செயல்படும் மீசை பத்மாவை அவர் பழிவாங்கும் காட்சிகள் எல்லாம் வேற லெவலில் விஜய் ஆண்டனியின் இமேஜை படத்தில் உயர்த்தியது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிரவாத கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியிடம் இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது, பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள்தான். அவர்கள் எதுவும் செய்யவில்லை. பகல்ஹாம் தாக்குதல் விவகாரத்தில் வீணாப் போன 4 பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது, என்று விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்