- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் விஜய் ஆண்டனி அப்படி நடிக்க அதுதான் காரணமா? - என்னதான் பெரிய நடிகரா...

அந்த படத்தில் விஜய் ஆண்டனி அப்படி நடிக்க அதுதான் காரணமா? – என்னதான் பெரிய நடிகரா வளர்ந்தாலும் பழசை மறக்காம இப்படி பேசியிருக்காரே…?

- Advertisement -

நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பிறகு நான் படம் மூலம் நடிகராக மாறியவர். தொடர்ந்து அவரது நடிப்பில் சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன், இந்தியா பாகிஸ்தான், ரோமியோ, கோடியில் ஒருவன், சைத்தான், திமிரு புடிச்சவன், ரத்தம், அண்ணாதுரை, காளி என பல படங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. விரைவில் மழை பிடிக்காத மனிதன் படம் ரிலீஸாக உள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி நடிகராக, இசையமைப்பாளராக ரசிகர்கள் மனதில் பெரிய வரவேற்பை பெற்றார். ஆனால் சமீபத்தில் அவரது மூத்த மகள் மீரா, தற்கொலை செய்துக்கொண்டது விஜய் ஆண்டனியை மிகப்பெரிய அளவில் பாதித்தது. எனினும் அந்த துயரத்தை கடந்து வந்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் ஆண்டனி நடித்த பல படங்களில், மிகவும் ரசிகர்களை கவர்ந்த படம் சசி இயக்கத்தில் வெளிவந்த பிச்சைக்காரன் படம்தான். ஆனால் அதன் 2ம் பாகம் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆனால் முதலில் வெளியான பிச்சைக்காரன் படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று, பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தில் தன் தாயை சாவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, ஒரு சாமியாரின் ஆலோசனைப்படி. மிகப் பெரிய செல்வச் சீமானாகிய விஜய் ஆண்டனி, 48 நாட்கள் பிச்சைக்காரனாக சென்னையில் வாழ்க்கை நடத்துவார். தினமும் பலரிடம் பிச்சை எடுத்து, அந்த காசை கோவில் உண்டியலில் போடுவார். பிச்சைக்காரர்களுடன் கூட்டமாக வாழ்வார். எந்த கதாநாயகனும் நடிக்க யோசிக்கும் இந்த கேரக்டரில் மிக அழுத்தமான நடிப்பை தந்தார் விஜய் ஆண்டனி.

இந்த படத்தில் இடம்பெற்ற 100 சாமிகள் இருந்தாலும், அம்மா உன்னைப் போல் ஆகிடுமா என்ற பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. இப்போதும் அம்மாவின் பெருமை சொல்லும் பாடலாக அது இருக்கிறது. சமீபத்தில் தனது அம்மா குறித்து விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார். எங்கப்பா மறைவுக்கு பிறகு, எங்க அம்மா தான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. வீட்டுல சமையலை முடிச்சுட்டு 5 கிலோ மீட்டர் நடந்துபோய் பஸ் பிடிச்சு ரயில்வே ஸ்டேஷன் போய் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு போவாங்க.

நாகர்கோவிலில் ரயிலில் இறங்கி, அங்க இருந்து பஸ் பிடிச்சு ஆபிஸ் போவாங்க. திரும்பவும் அதே மாதிரி பஸ் பிடிச்சு, ட்ரெயின் புடிச்சு, 5 கிலோ மீட்டர் நடந்து வந்து எங்களுக்கு சமைச்சு போட்டு, சாப்பிட வெச்சு தூங்க வைப்பாங்க. அவங்க உழைப்பை எல்லாம் கம்பேர் பண்ணும்போது, நம்ம உழைப்பெல்லாம் ஒண்ணுமே கிடையாது, என்று தன் அம்மா குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி.

சற்று முன்