- Advertisement -
Homeபொழுதுபோக்குசமந்தா - நாக சைதன்யா கதை தான் நயன்தாரா - விக்னேஷ் வாழ்க்கையிலும் நடக்கும், ஆர்டிஎக்ஸ்...

சமந்தா – நாக சைதன்யா கதை தான் நயன்தாரா – விக்னேஷ் வாழ்க்கையிலும் நடக்கும், ஆர்டிஎக்ஸ் பாமை அசால்ட்டாக தூக்கிப் போட்ட பிரபலம்

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த வரை நடிகை நயன்தாரா, இரண்டு முறை காதலில் தோற்றவர். முதலில் சிம்புவுடன் காதல் வயப்பட்டார். இருவரும் உதட்டு முத்தம் கொடுத்தனர். வல்லவன் படத்தில் நெருக்கமாக நடித்து, தங்களது காதலை வெளிப்படுத்தினர். ஆனால் ஒரு கட்டத்தில் காதல் பிரேக்கப் ஆனது.

அடுத்து பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்ட நயன்தாரா, அவருடன் பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. பிரபுதேவா டைரக்ட் செய்த வில்லு படத்தில், தனது காதலர் பிரபுதேவாவுக்காக உச்சக்கட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் நயன்தாரா.

- Advertisement -

எனினும் அதுவும் பிரேக்கப் ஆகி விட, இறுதியாக இயக்குநர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகள் காதலித்து கடந்த ஆண்டுதான், அவர்களது திருமணம் சீரும் சிறப்பாக நடந்தது. வாடகைத்தாய் மூலம் 2 ஆண் பிள்ளைகளுக்கும் அவர்கள் பெற்றோர்களாகி விட்டனர்.

இந்நிலையில், பிரபல தெலுங்கு ஜோதிடர் வேணுசாமி. இவர் ஆர்டிஎக்ஸ் பாம் போன்ற ஒரு பெரிய வெடிகுண்டை இப்போது போட்டிருக்கிறார். அதாவது, விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இப்படியே சேர்ந்து வாழ மாட்டார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் கண்டிப்பாக பிரிந்து விடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இவர் ஏற்கனவே சமந்தா – நாகசைதன்யா இருவரும் திருமணம் செய்துக்கொண்ட போது, இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ மாட்டார்கள். மிக விரைவில் பிரிந்து விடுவார்கள் என்று கூறியிருக்கிறார். அதே போல் அவர்கள் இருவரும் திருமணமான சில ஆண்டுகளிலேயே பிரிந்துவிட்டனர் என்று குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜாதகப்படி இருவரும் சேர்ந்து நீண்டகாலம் வாழ முடியாது. அவர்கள் இருவரும் கண்டிப்பாக பிரிந்து விடுவார்கள். அது நடக்கும். அப்படி அவர்கள் பிரியவில்லை என்றால், நான் இந்த ஜோதிட துறையில் இருந்தே விலகி விடுகிறேன், என்றும் கூறியிருக்கிறார். அடப்பாவிகளா, இப்படி அநியாயம் பண்றீங்களே என, நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்