- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் படத்துக்கு வைத்த பராசக்தி படத்தின் டைட்டிலை விட்டுக் கொடுத்தது அதனால்தான் - ஓபனாக பேசிய...

என் படத்துக்கு வைத்த பராசக்தி படத்தின் டைட்டிலை விட்டுக் கொடுத்தது அதனால்தான் – ஓபனாக பேசிய நடிகர் விஜய் ஆண்டனி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன் டிஸ்யூம் வேலாயுதம் நான் அவன் இல்லை நினைத்தாலே இனிக்கும் வெடி மரியாதை வேட்டைக்காரன் என பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பிறகு அவர் நடித்த பல படங்களுக்கும் விஜய் ஆண்டனிதான் இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.

இதையடுத்து நான் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி விஜய் ஆண்டனி வெற்றி பெற்றார். தொடர்ந்து சலீம் திமிரு புடிச்சவன் பிச்சைக்காரன் எமன் சைத்தான் கொலைகாரன் காளி அண்ணாத்துரை பிச்சைக்காரன் 2 கோடியில் ஒருவன் ரோமியோ என பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் பிச்சைக்காரன் திமிரு புடிச்சவன் படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

- Advertisement -

பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசியுடன் மீண்டும் நடிகர் விஜய் ஆண்டனி இணைந்திருக்கிறார். சமீபத்தில் அவர்கள் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. விரைவில் சசி விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே விஜய் ஆண்டனி நடித்த படம் சக்தி திருமகன். இந்த படத்துக்கு தெலுங்கில் பராசக்தி என டைட்டில் வைத்திருந்தார் விஜய் ஆண்டனி. ஆனால் அதே நேரத்தில் இயக்குனர் சுதா கொங்கரா சிவகார்த்திகேயன் நடித்துவரும் 25 வது படத்துக்கு பராசக்தி என டைட்டில் வைத்ததாக அறிவித்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஆனால் இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, சக்தி திருமகன் படத்துக்கு தெலுங்கில் வைக்கப்பட்ட பராசக்தி டைட்டிலை விட்டுத் தருவதாக கூறிவிட்டார். இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, சினிமா துறையில் மூன்று சங்கங்கள் இருப்பதால் பராசக்தி டைட்டிலைட் நான் பதிவு செய்து வைத்திருப்பது தெரியாமலேயே அவர்கள் இன்னொரு சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

என்றாலும் எங்கள் கதைக்கு அந்த டைட்டில் தான் பொருத்தமாக இருக்கும் என்று இயக்குனர் சுதா கேட்டுக் கொண்டார். அதனால் அந்த நட்புக்காக அந்த டைட்டிலை விட்டுக் கொடுத்து விட்டேன். இப்போது நான் நடிக்கும் சக்தி திருமகன் தெலுங்கு படத்திற்காக வேறு டைட்டிலை யோசித்து வருகிறேன் என்று நடிகர் விஜய் ஆண்டனி அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்