- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மீது அன்பு கொண்ட ரசிகர்கள் அந்த விஷயத்தை மட்டும் தயவு செய்து பண்ணாதீங்க -...

என் மீது அன்பு கொண்ட ரசிகர்கள் அந்த விஷயத்தை மட்டும் தயவு செய்து பண்ணாதீங்க – வேண்டுகோள் விடுத்த நடிகர் விஜய்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். ஜனநாயகன் என்ற படத்தில் இப்போது நடித்து வரும் விஜய், இந்த படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு முழுநேர அரசியல்வாதியாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் செயல்பட திட்டமிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தமிழ்நாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகராக உள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கும் ரசிகர்கள், அதே நேரத்தில் சினிமாவில் இருந்து அவர் ஜனநாயகன் படத்துடன் விலகுவதாக அறிவித்திருப்பதை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒரு படமாவது நடியுங்கள் என்று கேட்கின்றனர்.

- Advertisement -

அதே நேரத்தில் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் முதல்வர் நாற்காலிதான் தனது இலக்கு என்ற லட்சியத்துடன் விஜய் அரசியல் களத்தில் நிற்கிறார். விஜய் சினிமாவை விட்டு விலகும் அதே சமயத்தில் அவரின் மகன் ஜேசன் சஞ்சய் கலையுலக வாரிசாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தை லைகா தயாரிக்க, ஜேசன் சஞ்சய் இயக்குகிறார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியதாவது, என்னுடைய ரசிகர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். என் மீது வைத்துள்ள அபரிதமான அன்பின் காரணமாக தான் இதை செய்கிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.

- Advertisement -

என் படம் ரிலீஸாகும் போது என்ஜாய் பண்றீங்க, கொடி கட்டறீங்க, பட்டாசு வெடிக்கறீங்க. இதெல்லாம் ஓகே. ஏத்துக்கறேன். ஆனால் இந்த பாலாபிஷேகம் என்று ஒண்ணு பண்றாங்க. அதை மட்டும் செய்யாதீங்க. எத்தனையோ குடும்பங்கள் ஒரு பாக்கெட் பால் கூட வாங்க முடியாம கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.

அப்படி ஒரு புனிதமான விஷயத்தை ஒரு கட் அவுட்டுக்கு ஊத்தி நாம ஏன் வேஸ்ட் பண்ணனும்? அதை மட்டும் ரசிகர்கள் கொஞ்சம் அவாய்டு பண்ணினால் நான் சந்தோஷப்படுவேன் என்று நடிகர் விஜய் அந்த நேர்காணலில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்