நடிகர் விஜய் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பயணத்தை தொடர போகிறார் என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். அதனால்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜயா என்ற பஞ்சாயத்து எல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி இடத்தில் விஜய் என்ற கோஷம் எல்லாம் ஒலித்தது.
ஆனால் நம்பர் ஒன் பொசிஷனில் இருந்த விஜய், திடீரென எனக்கு சூப்பர் ஸ்டாரும் வேண்டாம், நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளத்தை கொட்டிக் கொடுக்கும் சினிமாவும் வேண்டாம் என முடிவெடுத்து, தமிழக வெற்றி கழகம் தலைவராக, தமிழக அரசியல் களத்தில் குதித்து விட்டார்.
தமிழ் சினிமாவில் இந்த டாப் லெவல் பொசிஷனுக்கு வர விஜய் கடும் போராட்டங்களை சந்தித்தார் என்றால் அது மிகையல்ல. தோல்வி படங்களை கொடுத்த போதெல்லாம் எள்ளி நகையாடப்பட்டார். பயங்கரமாக சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளானார். பலரும் விஜயை, பல விதங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
சமீபத்தில் லியோ படம் டிரெய்லரில் கூட, அந்த படத்தின் இயக்குநர் தேவையின்றி விஜயை, அந்த மோசமான கெட்ட வார்த்தையை பேச வைத்து, படத்துக்கு பிரமோ தேடிக்கொண்டார். ஆனால் விஜயின் நல்ல பெயரை டேமேஜ் ஆக்கினார். இப்படி பல விதங்களில், பல விஷயங்களில் மறைமுகமான பழிவாங்கப்பட்டவர் விஜய் என்றாலும், அவர் நம்புவது உழைப்பையும், தனது ரசிகர்களையும்தான்.
அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முக்கிய இலக்கு 2026 சட்டசபை தேர்தல்தான். எப்படியும் முதல்வர் நாற்காலியை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முடிவில் விஜய், தனது ரசிகர்களை, தொண்டர்களை அதற்காக தயார்படுத்திக்கொண்டு இருக்கிறார். அதனால் சினிமா ஹீரோ விஜய், நமக்கு வில்லனாக வந்து விட்டாேரே என திமுக, அதிமுக கட்சியினர் தான் இப்போது பயங்கர அப்செட்டில் இருக்கின்றனர்.
மக்களுக்கு செய்த சில நலத்திட்டங்களை சொல்லி, சொல்லி இந்த முறை ஆட்சியை அப்படியே தக்க வெச்சுக்கலாம் என்று திமுகவும், திமுகவை நம்பி ஓட்டுப் போட்டீங்களே, சொன்னதை செஞ்சாங்களா என்று மக்களிடம் கேள்வி கேட்டு, தங்களுக்கான ஆதரவை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என எடப்பாடி பழனிசாயும் கணக்கு போட்டனர். அவர்களுக்கு இடையில் இப்போது, முதல்வர் நாற்காலி இந்தமுறை எனக்குதான் என வில்லனாக விஜய் வந்து நிற்பது அவர்களை அரண்டு போகச் செய்திருக்கிறது.





