- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்முறையாக அரசியல் கட்சியை ஆரம்பித்து இப்படி ஒரு விஷயத்தில் சிக்கி விட்டாரா விஜய்... அப்படி என்றால்...

முதல்முறையாக அரசியல் கட்சியை ஆரம்பித்து இப்படி ஒரு விஷயத்தில் சிக்கி விட்டாரா விஜய்… அப்படி என்றால் அரசியலை விட அவருக்கு சினிமா தான் முக்கியமா?…

- Advertisement -

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் எதிரெதிர் பக்கம் யானையும், வாகை மலரும், 28 நட்சத்திரங்களும் இடம்பெற்று இருந்தன. சிவப்பு மஞ்சள் சிவப்பு என்னும் இடத்தில் அந்த கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனுடன் கட்சி பாடல் ஒன்றையும் விஜய் வெளியிட்டு இருந்தார்.

 

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தனது கட்சி பணிக்கான வேலைகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். இதன் முதல் புள்ளியாக அமைகிறது தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் மாநாடு. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.

 

- Advertisement -

கடந்த செப்டம்பர் மாதமே இது நடைபெற இருந்த நிலையில், காவல்துறை நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. ஆனால் மாநாட்டிற்கான தேதி குறுகிய காலமே இருந்ததால் அது அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகம் தீவிரப்படுத்தி வருகிறது.

 

நேற்று அதிகாலை மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ஆனந்த் பங்கேற்றார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். அவர்களுக்கு காலை உணவாக சுட சுட இட்லி, பூரி, வடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

 

ஆனால் கட்சியின் முதல் நிகழ்ச்சியான பந்தல் கால் போடும் பணியில் விஜய் பங்கேற்கவில்லை. மாறாக மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும் என்று அவர் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதேசமயம் தனது கடைசி திரைப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

 

ஹெச் வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி உள்ளிட்டோர்ர் நடிக்கின்றனர். இப்படியான சூழலில் கட்சியின் பந்தல்கால் நடும் நிகழ்ச்சியில் பங்கு பெறாமல், தனது படத்தின் பூஜை விழாவில் விஜய் பங்கேற்று பேசு பொருளாகி இருக்கிறது. அப்படி என்றால் அவருக்கு தனது அரசியலை விட, திரைப்படம் தான் முக்கியமா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

- Advertisement -

சற்று முன்