- Advertisement -
சமீபத்தில் வெளியான பெத்தி படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தது சர்ச்சையாக மாறியது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜான்வி கபூர் கூறியதாவது, இந்த விவகாரத்தில் நான் பல விஷயங்களை உணர்ந்தேன். இதைப்பற்றி பேசுவதற்கு நான் தயங்க காரணம் அந்தப் படத்திற்காக பலரும் கடுமையாக உழைத்திருந்தார்கள். மேலும் இதைப்பற்றி நான் என்ன சொல்வது? எனக்கும் இந்த சர்ச்சையில் ஒரு பங்கு இருப்பதால் அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இதுபோன்ற கதைக்களம் நமது சமூகத்தில் குறிப்பாக பெண்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கம் என் மனசாட்சியை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பெண்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்த குற்ற உணர்வை நான் எப்போதும் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று நடிகை ஜான்வி கபூர் வருத்தமாக கூறியிருக்கிறார்.





