- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ்நாட்டில் நடப்பது அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி - தவெக பெண் நிர்வாகிகள் மீது...

தமிழ்நாட்டில் நடப்பது அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி – தவெக பெண் நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஆவேசமடைந்த நடிகர் விஜய்!

- Advertisement -

சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவச் சென்ற தவெக பெண் நிர்வாகிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, சென்னை வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு பல குடிசைகள் தப்பியுள்ளன.

தீ விபத்துகளில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்த மக்கள் தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை போர்வை பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர்.

- Advertisement -

பாதிக்கப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து அவற்றை பெற்றுக் கொண்டனர். இதைப் பார்த்த காவல்துறையினர் தவெக நிர்வாகிகளை தடுத்து நிறுத்தியதுடன் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டி உள்ளனர். காவல்துறையினர் வரம்பு மீறி பேசிய அத்துமீறி செயல்படுவதை பார்த்த கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கங்காவதி, மக்களுக்கு உதவி செய்து தடுப்பது ஏன் என்று காவல்துறையினை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்

அப்போது காவல்துறையினர் கொஞ்சமும் ஈவு இரக்கம் இன்றி கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து கீழே தள்ளி உள்ளனர். மேலும் இதை தடுக்கச் சென்ற மகளிர் அணியை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் ஆடையை காவல் துறையினர் பிடித்து இழுத்து தள்ளிவிட்டு உள்ளனர். காயமடைந்த கட்சி உறுப்பினர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

தீ விபத்தில் பாதிக்கப்பட்டு குடிசைகளை இழந்து தங்களின் அத்தியாவசிய உடைமைகளை இழந்து நிர்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது என்பது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மாபெரும் குற்றச்செயலா? பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதோ, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவுவதோ கூடாது என்று காவல்துறை சொல்கிறது என்றால் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பெண்களை எட்டி உதைத்தும் அவர்களின் ஆடையை கிழித்தும் அராஜகமாக இழிவாகத்தான் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளாரா? தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல அதிகார திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே என்பதற்கு இதைவிட சான்று தேவையா என்று நடிகர் விஜய் அந்த பதிவில் ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்