- Advertisement -
Homeபொழுதுபோக்குவேடிக்கை பார்க்கும் நிலையில் முதல்வர் இருப்பது வெட்கக்கேடானது - அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்த தவெக...

வேடிக்கை பார்க்கும் நிலையில் முதல்வர் இருப்பது வெட்கக்கேடானது – அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்த தவெக தலைவர் விஜய்!

- Advertisement -

தமிழக அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து நடிகர் விஜய் தனது குமுறல்களை வெளிப்படுத்தி வருகிறார். இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் ஊடகத்துறை சார்ந்தவர்கள் திமுக கட்சியினரால் தாக்கப்படுவது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.

- Advertisement -

குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.

பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.யஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி உறுதி உறுதி என்று அந்த பதிவில் நடிகர் விஜய் கூறியிருக்கிறார். தமிழக அரசின் செயல்பாடுகள் சமீபத்தில் நடந்த தவெக கட்சி 3ம் ஆண்டு துவக்க விழாவில் நடிகர் விஜய் சொன்ன திமுக குறித்த திருக்குறள் பெரிய அளவில் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்