- Advertisement -
Homeபொழுதுபோக்குடாஸ்மாக் ஊழலை பார்த்தால் திமுக அரசு குறித்து ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம் - தமிழக...

டாஸ்மாக் ஊழலை பார்த்தால் திமுக அரசு குறித்து ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம் – தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கிண்டல்!

- Advertisement -

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ. 1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டு இருப்பது, தமிழக மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் திமுக அரசின் மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இதில் தமிழக வெறறிக் கழகம் தலைவர் நடிகர் விஜயும் தனது கருத்தை அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தவெக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முழுவதும் திமுக அரசின் நிர்வாகத்தின் கீழே இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 6ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது,

சோதனையின் முடிவாக அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் கணக்கில் வராத பணம் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. டாஸ்மார்க் பணியாளர்களை பணியமர்த்துதல் இடமாற்றம் செய்தல் வாகனங்கள் டெண்டர் ஒதுக்கீடு பார் உரிமை வழங்கும் டெண்டர் ஒதுக்கீடு,

கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மதுபாட்டில்ளுக்கும் பெறப்பட்ட ரூபாய் 10 முதல் 30 வரைலான கூடுதல் தொகை டிஸ்டில்லரீஸ் மற்றும் பாட்டில் கம்பெனிகள் மூலம் நடந்த முறைகேடுகள் பற்றி பெரிய பட்டியலே அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முறைகேடு பற்றி விளக்கும்போது நன்கு திட்டமிடப்பட்ட கணக்கில் வராத பணம் ஈட்டுதல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான பணம் பெறுதல். டிஸ்டில்லரீஸ் கம்பெனிகளுக்கும் பாட்டில் கம்பெனிகளுக்கும் இடையில் நடந்த மிகப்பெரிய கூட்டு மூலம் சம்பந்தமான ஆவணங்கள் தவறாக கையாளப்பட்டு மறைமுகமாக அல்லது மறைக்கப்பட்ட முறையில் பணம் வருதல் முறையான ஏய்ப்பு நடந்துள்ளது என்று விவரிக்கப்பட்டுள்ளது.

இதை வைத்து பார்க்கையில், முறைகேடு செய்வதில் பெரும் அனுபவம் வாய்ந்த கைதேர்ந்த மற்றும் நுட்பமான மூளைகளால் மட்டுமே இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அர்த்தம் கொள்ளத் தோன்றுகிறது. அமலாக்கத் துறை டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பண மோசடி குறித்து பயன்படுத்தியுள்ள வார்த்தைகளை பார்த்தால் வெற்று விளம்பர மாடல் திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது என்று நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.

சற்று முன்