நடிகர் விஜய், நம்பர் ஒன் நடிகராக இருந்து வருகிறார். கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்த பிறகு, மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். அவரது அந்த கடைசி படத்தை இயக்குவது யார், தயாரிக்கப் போவது யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக கோலிவுட்டில் உலா வந்துக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கு விஜய் பிக்ஸ் செய்துள்ள சம்பளம் ரூ. 250 கோடி என்கின்றனர்.
நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து, பொதுமக்களிடம் நல்ல வரவேற்புதான் இருக்கிறது. அதிகளவில் எதிர்மறையான விமர்சனங்களை காண முடியவில்லை. அதே வேளையில் அதிமுக, திமுக கட்சிகள் சார்ந்தவர்களிடம் மட்டும் அதிருப்தி நிலவுகிறது. அதற்கு முக்கிய காரணம், அவர் வருகிற 2026 சட்டசபை தேர்தலை குறிவைத்து களம் இறங்குவதுதான்.
இப்போதைய சூழ்நிலையில், அரசியல் களத்தில் இருப்பதில் ஆக்டிவ் ஆக இருப்பவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன். அதற்கு பின், புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய். சரத்குமார் தேர்தல் நேரத்தில் மட்டுமே சீன் காட்டுவார். அதன்பிறகு படங்களில் நடிப்பதில் பிஸியாகி விடுவார்.
இதற்கிடையே நடிகர் விஷால், அரசியலுக்கு வர முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக வந்துவிடுவேன் என அவர் தரப்பிலும் ஒரு சீன் போட்டு வைத்திருக்கிறார். ஒருவேளை தேர்தல் நேரத்தில் அவரும், நானும் ஜெயிலுக்கு போறேன் என வடிவேலு பேசிய டயலாக் போல, நான் அரசியலுக்கு போறேன் என, தமிழக அரசியலுக்குள் வந்தாலும் வந்துவிட வாய்ப்புள்ளது.
நடிகர் விஜய் அரசியல் வருகையை பொருத்தவரை மாஸ் ஆகவே மக்களால் பார்க்கப்படுகிறது. அதே வேளையில் திரைத்துறை சார்ந்தவர்களின் ஆதரவும் இருந்தால், அவரது வெற்றி இன்னும் பலப்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக ரஜினிகாந்த், அஜீத்குமார், தனுஷ், சூர்யா போன்றவர்கள், விஜய்க்கு பகிரங்கமாக தங்களது ஆதரவை தெரிவிக்கும் பட்சத்தில் அது விஜய் கட்சிக்கு பெரிய பலமாக மாறும்.
உதாரணமாக தேர்தல் நேரத்தில் பிரசார சமயத்தில் இதுபோன்ற ஆதரவு அறிவிப்புகளை அந்த நடிகர்கள் வெளியிடும் பட்சத்தில், அவர்களது ரசிகர்களும் விஜய்க்கு ஓட்டுப்போட அதிக வாய்ப்புள்ளது. 35 ஆண்டுகளுக்கு மேலாக விஜய், தமிழ் சினிமாவில் இருந்தவர். கலைத்துறை சார்ந்த ஒருவர் முதல்வராவது, சினிமாவின் எதிர்கால வளர்ச்சிக்கும் உதவும் என்பதால், இயக்குநர் சமுத்திரக்கனி போல மற்றவர்களும், தானாக முன்வந்து மக்களுக்காக நிற்க வேண்டும். காலப்போக்கில் தான் இதற்கான உண்மையான பதில்கள் கிடைக்கும்.





