- Advertisement -
Homeபொழுதுபோக்கு63 வயதான நடிகர் எனக்கு கணவரா? இதை நான் எதிர்பார்க்கவே இல்லை - கடும் கோபத்தை...

63 வயதான நடிகர் எனக்கு கணவரா? இதை நான் எதிர்பார்க்கவே இல்லை – கடும் கோபத்தை வெளிப்படுத்திய நடிகை மிருணாள் தாகூர்!

- Advertisement -

எப்போதுமே நாயகிகள் இளம் வயது ஹீரோக்களுடன் நடிப்பதையே அதிகமாக விரும்புவார்கள். ஆனால் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல மொழிகளிலும் ஹீரோக்கள் 50 முதல் 70 வயது கடந்த சீனியர் நடிகர்களாக தான் இருக்கின்றனர். அதனால் மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய சூழலில்தான், அதிக வயதான சீனியர் நடிகர்களுடன் பல இளம் நாயகிகள் நடிக்கின்றனர்.

நடிகை மிருணாள் தாகூர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்து வருகிறார். இந்தியில் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு மொழி படங்களிலும் மிருணாள் தாகூருக்கு மிகப்பெரிய வரவேற்பும் ரசிகர்களின் ஆதரவும் இருந்து வருகிறது. ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் அவர் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக தேரே இஸ்க் மெய்ன் படத்திலும் நடித்திருந்தார். அப்போது நடிகர் தனுஷை மிருணாள் தாகூர் காதலிப்பதாக ஒரு தகவல் பரவி இணையத்தில் வைரலானது. பிறகு அது வதந்தி என்பதும் உறுதியானது. இது உண்மையல்ல, வதந்தி தான் என்று மிருணாள் தாகூரே கூறிவிட்டார்.

மேலும் அந்த வதந்தியால் எனக்கு அதிகமான பிரமோஷன் இலவசமாக கிடைத்திருக்கிறது என்றும் ஜாலியாக கூறியிருந்தார். சமீபத்தில் மிருணாள் தாகூர் நடிப்பில் டகாய்ட்; ஏ லவ் ஸ்டோரி என்ற படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மிருணாள் தாகூர் கடந்த ஆண்டு அவர் நடித்த சன் ஆஃப் சர்தார் 2 படம் பற்றி கோபமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

அப்போது மிருணாள் தாகூர் கூறியதாவது, சன் ஆஃப் சர்தார் 2 என்ற படத்தில் எனக்கு ஜோடியாக ஒரு வயதான நடிகரை தேர்வு செய்வார்கள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. 63 வயதான நடிகர் சங்கி பாண்டே தான் மிருணாள் தாகூரின் கணவர் ரோலில் அந்த படத்தில் நடித்திருந்தார். சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவருக்கு மிருணாள் தாகூரை விட 6 வயதுதான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மிக மிக சீனியரான நடிகர் என் கணவர் ரோலில் நடிப்பார் என்று எனக்கு தெரியாது. அந்த படத்தில் நான் அதை எதிர்பார்க்கவில்லை. அங்கேயே நான் தோற்றுவிட்டேன். அங்கேயே எல்லா நம்பிக்கையும் எனக்கு உடைந்து விட்டது. அந்த படக்குழு இப்படி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று மிகவும் கோபமாக மிருணாள் தாகூர் அதில் பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்