விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படம், அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வெளியாகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறை நாட்களை குறி வைத்து இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. அஜித்தை வைத்து மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் ஹிட்டை வெங்கட் பிரபு கொடுத்ததால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்.
புதிய கீதை திரைப்படத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து மீண்டும், தளபதி விஜய் படத்திற்காக பணியாற்றி இருக்கிறார். ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் இசையமைத்த பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. சென்னை 600028, மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களை நாம் உதாரணமாக கூறலாம்.
இதேபோல் விஜய் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தனது மேஜிக்கை நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அதனை யுவன் சங்கர் ராஜா 50 சதவீதம் கூட பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். படத்திலிருந்து முதன்முறையாக வெளியான விசில் போடு பாடலுக்கே இது அப்பட்டமாக தெரிந்தது.
அந்தப் பாடலை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்க அந்த அளவுக்கு அதில் வைப் இல்லை என்று தெரிவித்தனர். இதன் பிறகு வெளியான இரண்டாவது பாடல் ஓரளவு பேசப்பட்டாலும் அதுவும், ரிப்பீட்டாக கேட்கும் அளவுக்கு இல்லை என்று தெரிவித்தனர். இப்படியான சூழலில் அண்மையில் வெளியான ஸ்பார்க் பாடல் விஜய் ரசிகரின் பொறுமையை சோதித்தது.
பாடலும் சுத்தமாக எடுபடாத சூழலில், அதில் விஜய் வந்த கெட்டப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. படத்தில் இரண்டு விஜய் கதாபாத்திரங்கள் என்பதால் ஒரு விஜயை டிஏஜிங் முறை மூலம் மிகவும் இளமையாக காட்ட வெங்கட் பிரபு தீவிரம் காட்டினார். இதற்காக அவருடன் தயாரிப்பாளர் அர்ச்சனா மற்றும் விஜய் ஆகிய மூவரும் வெளிநாடு எல்லாம் சென்று வந்தனர்.
ஆனால் எத்தனையோ மீறி அந்த இளமையான விஜய் தோற்றம் பலரையும் திருப்தி படுத்தவே இல்லை. இதனால் கடுமையாக அப்செட் ஆகிறது விஜய் ரசிகர்கள். இந்த நிலையில் அந்த திரைப்படத்திலிருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது கோட் திரைப்படத்தை முழுமையாக விஜய் பார்த்திருக்கிறாராம். அது மட்டுமல்ல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் குடும்பத்தினரும் படத்தை பார்த்து உள்ளார்கள். இதில் அனைவருக்கும் முழு திருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முதல் பாதி காமெடி ஆகவும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது இணையத்தில் வேகமாக பரவிக் கொண்டிருக்க, விஜய் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்திருக்கிறார்கள்.





