- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிச்ச நடிகர் விஜய், ஆனால் நடிகர் விஜய்க்கு ரொம்ப பிடிச்ச...

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிச்ச நடிகர் விஜய், ஆனால் நடிகர் விஜய்க்கு ரொம்ப பிடிச்ச நடிகர் யார் தெரியுமா – அட இவர் நடிப்புல வேற லெவலா கலக்குவாரே…?

- Advertisement -

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். ஆனால் இப்போது நடித்துள்ள தி கோட் படம், மற்றும் அடுத்து நடிக்க உள்ள விஜய் 69 படத்துடன் நடிப்புக்கு, வணக்கம் நன்றி சொல்லிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப் போவதாக, கடந்த பிப்ரவரி மாதமே அறிவித்துவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி திருச்சியில், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், 10 லட்சம் பேர் மாநாட்டில் அமரும் வகையில் இருக்கை வசதிகளை செய்ய கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய், அரசியலுக்கு வருவதை ஒரு தரப்பினர் பலமாக வரவேற்றாலும், அவரது ரசிகர்களில் ஒரு தரப்பினர், இனிமேல் நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க மாட்டாரா, என்று ஏக்கமாக கேட்டு வருகின்றனர். அரசியலுக்கு வந்தாலும், ஆண்டுக்கு ஒரு படத்திலாவது அவர் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னையில், சுவர் விளம்பரங்கள் செய்துள்ள சில ரசிகர்கள், விஜய் நடிப்பை தொடர வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ஆனால் விஜயின் இப்போதைய முடிவு, முழுநேர அரசியல் என்றாலும் அது பின்னாளில் வேறு முடிவுகளுக்கு மாறவும் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் என்னதான் திட்டமிட்டாலும் கால சூழ்நிலைகள்தான் சில விஷயங்களை முடிவு செய்யும் என்பதால், அரசியலில் இருந்தாலும் ஒரு கட்டத்தில் விஜயும் சினிமாவில் அவ்வப்போது ஒரு படத்தில் ரசிகர்களுக்காக நடிக்கலாம் என்றும் முடிவுக்கு வரலாம்.

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகராக உள்ள நிலையில், நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்தமான நடிகர் யார் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பகவதி படத்தை இயக்கிய இயக்குனர் ஏ வெங்கடேஷ் ஒரு நேர்காணலின் போது வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறுகையில், நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகர் ரகுவரன்தான். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தில், விஜய்க்கு ஷூட்டிங் முடிந்து விட்டாலும், அவர் வீட்டுக்கு கிளம்பாமல், ரகுவரன் நடிக்கும் காட்சிகளை ரசித்து பார்த்துவிட்டு பிறகுதான் புறப்பட்டுச் செல்வார். அந்த அளவுக்கு ரகுவரன் நடிப்பை விஜய் மிகவும் விரும்பி ரசிப்பார், என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்