- Advertisement -
Homeபொழுதுபோக்குநேரத்தை வீணடிக்கிறாரா இயக்குனர் வெற்றிமாறன்? அரசன் ராஜன் வகையறா படப்பிடிப்புகளில் நீடிக்கும் தாமதம் ஏன்? -...

நேரத்தை வீணடிக்கிறாரா இயக்குனர் வெற்றிமாறன்? அரசன் ராஜன் வகையறா படப்பிடிப்புகளில் நீடிக்கும் தாமதம் ஏன்? – பதில் தந்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறியதாவது, வாடிவாசல் படப்பிடிப்பில் பயன்படுத்துவதற்காக அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் உயிருள்ள காளை மாடு போல ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த காளை மாட்டுடன் சூர்யா நடிக்கும் காட்சிகள் குழந்தைகள் கூட குதூகலிக்கும் விதமாக இருக்கும். அந்த அனிமேட்ரானிக்ஸ் காளையை உருவாக்க நீண்ட காலம் ஏற்பட்டது. அதனால்தான் வாடிவாசல் படம் துவங்காமல் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த தாமதத்தை ஈடு கட்டுவதற்காகவும் எனக்கு ஏற்பட்ட பொருளாதார சிரமத்தை சரிகட்டுவதற்காகவும் தான் வெற்றிமாறன் இப்போது அரசன் மற்றும் ராஜன் வகையறா ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அவர் நேரங்களை வீணாக்குபவர் அல்ல. அவசர அவசரமாக படங்களை இயக்கும் நபரும் அல்ல. எல்லாமே சரியான திட்டமிடலுடன்தான் நடக்கிறது என்று தாணு கூறியிருக்கிறார்.

சற்று முன்