- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் நடிக்கும் அடுத்த படம்…. கணிசமாக உயர்ந்த ஏகே சம்பளம் - படத்தின் மொத்த பட்ஜெட்...

அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படம்…. கணிசமாக உயர்ந்த ஏகே சம்பளம் – படத்தின் மொத்த பட்ஜெட் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படம் மாஸ் ஹிட் ஆன நிலையில் அஜீத்குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க அஜீத்குமார் அனுமதி தந்து விட்டார். ஏகே 64 படத்தின் இயக்குனரும் அவர்தான் என்பது உறுதியாகி விட்டது.

இப்போது நடிகர் அஜீத்குமார் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸ்களில் பிஸியாக இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இந்த கார் ரேஸ் தொடர்ந்து 10 மாதங்களுக்கு நடக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் வரை கார் ரேஸ் நடப்பதால் அதை முடித்து விட்டு திரும்பிய பிறகு வரும் நவம்பரில்தான் ஏகே 64 படப்பிடிப்பு துவங்க உள்ளது.

நடிகர் அஜீத்குமார் அவரது அடுத்த படத்துக்கு அதாவது ஏகே 64 படத்துக்கு நவம்பர் முதல் அடுத்த 2026ம் ஆண்டு பிப்ரவரி வரை 4 மாதங்கள் மட்டுமே கால்ஷீட் தந்திருக்கிறார். அதற்குள் அவர் நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட வேண்டும். ஏனென்றால் 2026ம் ஆண்டு மார்ச்சில் மீண்டும் கார் ரேஸ்சில் பங்கேற்க அஜீத்குமார் போய் விடுவார்.

அஜீத்குமார் கார் ரேஸிங் என்று கார் பந்தய விளையாட்டில் அணித் தலைவராக உள்ள அஜீத்குமார் கார் ரேஸ், சினிமாவில் நடிப்பு என இனி 2 விதமாக தனது தேதிகளை ஒதுக்கி தர இருக்கிறார். கார் ரேஸ் இல்லாத நேரத்தில் மட்டுமே சினிமாவில் நடிப்பது என்ற முடிவுக்கும் அவர் வந்திருக்கிறார். அதனால் ஆண்டுக்கு ஒரு படம் என்ற முடிவிலும் அவர் இருக்கிறார்.

இந்நிலையில் அஜீத்குமார் நடிக்கும் அவரது 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்யும் நிலையில், அந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். இந்த படம் வருகிற மே 1ம் தேதி அஜீத்குமார் பிறந்த நாளில் வெளியாகும். அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏகே 64 படத்தில் நடிக்கும் அஜீத்குமாரின் சம்பளம் ரூ. 180 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. குட் பேட் அக்லி படத்தில் நடிக்க அவர் ரூ. 163 கோடி வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், 17 கோடி ரூபாய் தனது சம்பளத்தை அஜீத்குமார் அதிகரித்துள்ளார். மேலும் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் சம்பளம் ரூ. 12 கோடி என்ற நிலையில், படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 260 கோடி முதல் ரூ. 275 கோடிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்