- Advertisement -
விஜய் டிவியில் நடந்து வரும் தமிழ் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நேற்று நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக தொகுப்பாளராக நடிகை ரம்யா கிருஷ்ணன் பங்கேற்றார். விஜய் சேதுபதிக்கு தொண்டையில் பாதிப்பு காரணமாக ரம்யா கிருஷ்ணன் நேற்றும் இன்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் ஜேசன், முனியம்மா இடையே வீட்டுக்குள் நடந்த ஒரு சண்டையை சுட்டிக்காட்டி பேசிய நடிகை ரம்யா கிருஷ்ணன், அந்த சம்பவம் குறித்த குறும்படத்தையும் போட்டுக் காட்டினார். மேலும் போட்டியாளர் ஜேசன் ஐயம் மேன் ஐயம் மேன் என்று கத்தியும் அவரை ரம்யாகிருஷ்ணன் இன்சல்ட் செய்தது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.





