நடிகர் விஜய் என்ற பெயரை சொன்னாலே, ரசிகர்கள் மத்தியில் அனல் பறக்கிறது. தளபதி தளபதி என கோஷம் போட ஆரம்பித்து விடுகின்றனர். அதுவும் கடந்த சில ஆண்டுகளாக விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் இமேஜ் என்பது, அவர் நடிக்கும் கதையோ, கேரக்டரோ தேவையில்லை. அவர் திரையில் வந்தாலே போதும் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களின் மனநிலை மாறியிருக்கிறது.
அதனால்தான் மாஸ்டர், வாரிசு, லியோ போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலை குவித்தன. இந்த படங்கள் விமர்சன ரீதியாக பலத்த தோல்வி படங்கள்தான் என்றாலும், வசூலில் பல நூறு கோடிகளை குவிக்க ஒரே காரணம் இந்த படங்களின் நாயகன் விஜய் என்பது மட்டுமே பிரதானமாக இருந்தது.
அதிலும் லியோ போன்ற ஒரு மொக்கை படத்தை எங்குமே பார்க்க முடியாது. இந்த 2023ம் ஆண்டில் இரட்டை குழந்தைகள், நரபலி, 5 பேரை சுட்டுக்கொன்றவருக்கு உடனடி விடுதலை, வீட்டுக்குள் திடீரென வரும் ஹைனா சுப்ரமணி இதெல்லாம், டிவிஸ்ட் கிடையாது.உருட்டுலயே மிக மோசமான உருட்டாக இருந்தும் அந்த படத்தின் வசூல் 600 கோடி ரூபாயை தாண்டியது.
இதே போல் மற்றொரு நடிகரை குறிப்பிட்டு சொல்லலாம் என்றால், அவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக உருட்டு படங்களை, பில்டப் படங்களை தந்தே காலத்தை ஓட்டி வருபவர். தங்கப்பதக்கம் கதையை உல்டாவாக்கி ஜெயிலர் படம் ஆக தந்து, ரசிகர்களிடம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தார். வேட்டையன் படமும் பெரிய உருட்டாக, பில்டப் ஆக தான் இருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இப்போது விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் தான் எடுக்கப்பட இருந்தது. கிளைமாக்ஸ் காட்சிகளை அங்கு படம்பிடிக்க தான் வெங்கட்பிரபு திட்டமிட்டு இருந்தார். ஆனால் அது திடீரென கேரளாவுக்கு மாறியது, கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக போய்விட்டது. அங்கும் திருவனந்தபுரத்தில் நடந்த ஷூட்டிங் பகுதிக்கு வந்து தளபதி, தளபதி என கோஷம் போட ஆரம்பித்து விட்டனர்.
இதையடுத்து ஷூட்டிங்கை முடித்துவிட்டு வந்த விஜய், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கேரவன் வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கையசைத்தார். தொடர்ந்து அங்கு திரண்டிருந்த ரசிகர்களுடன் வேன் மீது நின்றபடி செல்பி எடுத்துக்கொண்டார். தமிழ்நாட்டில் செய்வது போலவே, அங்கும் அதே ஸ்டைலில் கேரவன் மீது ஏறி, ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்தது, சோஷியல் மீடியாவில் டிரண்டிங் ஆகி வருகிறது.





