- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிட்டார், நீங்களும் அப்படி அரசியலுக்கு வருவீங்களா? - இதற்கு...

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிட்டார், நீங்களும் அப்படி அரசியலுக்கு வருவீங்களா? – இதற்கு கேபிஒய் பாலா சொன்ன நெத்தியடி பதிலை பாருங்க!

- Advertisement -

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கி விட்டார். வரும் 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலை நேரடியாக எதிர்கொள்கிறார். இதன்மூலம் திமுக, அதிமுக கட்சிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள விஜய், நிச்சயம் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார் என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.

இதற்கு முன்னோட்டமாக தான், கடந்த ஆண்டில் திடீரென 234 தொகுதிகளில் இருந்தும் 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சென்னைக்கு நேரில் வரவழைத்து பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். கடந்த டிசம்பர் மாத இறுதியில் தென்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

- Advertisement -

அதே போல் விஜய் டிவியில் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான கேபிஒய் புகழ் பாலா, பலவிதமான உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகிறார். மழைவாழ் கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களை இலவசமாக வாங்கித் தந்திருக்கிறார். இலவச ஆட்டோ சேவை துவங்கியிருக்கிறார்.

சென்னையில் கனமழையால் மக்கள் வீடுகள், உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட போது, தனது வங்கி இருப்பில் இருந்த ரூ. 2 லட்சத்தை எடுத்து 200 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவியாக வழங்கிய பாலா, மீண்டும் தனக்கு சேமிப்பு சீட்டு பணத்தை எடுத்து ரூ. 3 லட்சம் ரூபாயை அதே போல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி உதவினார்.

- Advertisement -

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வந்ததை போல நீங்களும் வருவீர்களா என, செய்தியாளர்கள் கேட்டதற்கு பாலா கூறியதாவது, விஜய் சார் பீக்கில் இருக்கிறார். நான் வீட்டில் இருக்கிறேன். அவர் பற்றி எல்லாம் பேசுவதற்கு எனக்கு தகுதியே இல்லை. அரசியலில் சேரும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. எனக்கு பதவி ஆசையும் இல்லை. அந்த அளவுக்கு மூளையும் இல்லை.

எனக்கு சேவை மட்டுமே போதும். அரசியலில் வந்து தாக்கு பிடிக்கும் அளவுக்கு எனக்கு அறிவோ, சக்தியோ இல்லை. நான் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கி தருவதாக கூறியிருந்தேன். அதில் 5 என்ற இலக்கை முடித்து விட்டேன். மீதியையும் வாங்கி கொடுத்து விடுவேன். இதை முடித்துவிட்டு இன்னொரு இலக்கு இருக்கிறது. அதை நோக்கி பயணிப்பேன். இதில் எந்த விதமான அரசியல் நோக்கமும் இல்லை. அன்பின் ஏக்கம் மட்டுமே இருக்கிறது, என்று கூறியிருக்கிறார் கேபிஒய் பாலா.

- Advertisement -

சற்று முன்