- Advertisement -
Homeபொழுதுபோக்குபோராட்ட களத்தில் இறங்க தயாரான தவெக தலைவர் விஜய், போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டு கடிதம்...

போராட்ட களத்தில் இறங்க தயாரான தவெக தலைவர் விஜய், போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டு கடிதம் – ஆளுங்கட்சிக்கு இப்பவே இம்சை தர ஆரம்பிச்சிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் பலர். ஆனால் அதில் 2 பேர்தான் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றனர். ஒருவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அடுத்து கேப்டன் விஜயகாந்த். ஜெயலலிதா, மக்கள் செல்வாக்கு பெற்றவராக மாறியது அதிமுக தந்த ஆதரவால்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் ஜெயலலிதாவை அரசியலுக்குள் கொண்டு வந்தார்.

இப்படி எம்ஜிஆர் விஜயகாந்தை தொடர்ந்து இப்போது தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்தாண்டில் துவங்கிய அவர், விக்ரவாண்டியில் நடத்திய முதல் அரசியல் மாநாட்டில் திமுக தான் என்னுடைய அரசியல் எதிரி என பகிரங்கமாக அறிவித்தார்.

தொடர்ந்து திமுக அரசின் செயல்பாடுகள், குறைகளை சுட்டிக்காட்டி பேசி வருகிறார். நேற்று முன்தினம், திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்து விடுவதாக தேர்தல் வாக்குறுதி தந்து ஏமாற்றி விட்டது. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி திமுக அரசை கடுமையாக விமர்ச்சித்திருந்தார்.

வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் விஜய், இப்போது மக்களுடன் ஒருவராக போராட்ட களத்தில் இறங்க தயாராகி விட்டார். ஆனால் விஜய் பொதுமக்கள் மத்தியில் சென்றாலே கூட்டம் தாறுமாறாக திரண்டு விடும் என்பதால், அதற்காக போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டு கடிதம் தந்திருக்கிறார்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அதுகுறித்து மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அந்த போராட்டக்களத்தில் இறங்கி மக்களுடன் ஒருவராக நின்று போராட நடிகர் விஜயும் தயாராகி உள்ளார்.

இதற்காக அவர், போலீஸ் கமிஷனரிடம் முறைப்படி சட்ட ரீதியாக அனுமதி கேட்டிருக்கிறார். ஏனெனில் தேவையில்லாத விமர்சனம், சர்ச்சை ஏற்படாமல் தவிர்க்க மக்கள் கூடும் பொது இடத்தில் போராட்டத்தில் பங்கேற்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த அனுமதியை விஜய் கேட்டுள்ளார். தொடர்ந்து திமுக அரசுக்கு விஜய் இம்சை கொடுத்து வருவதால் அவர்கள் அப்செட்டில் உள்ளனர். அதே நேரத்தில் இதற்கு போலீஸ் அனுமதி கிடைக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது.

சற்று முன்