- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் களத்தில் புது எதிரி என்று நடிகர் விஜயை மறைமுகமாக சொன்ன ரஜினிகாந்த் - கண்ணா...

அரசியல் களத்தில் புது எதிரி என்று நடிகர் விஜயை மறைமுகமாக சொன்ன ரஜினிகாந்த் – கண்ணா என அவரது ஸ்டைலில் பேசி பதிலடி கொடுத்த தளபதி!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக அரசியல் களத்தில் அனல் கிளப்பிக்கொண்டு இருக்கிறது. கடந்தாண்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய அவர் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரண்டு மாநில மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்தி முடித்திருக்கிறார். இப்போது மாவட்டம் வாரியாக மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே தனது அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் வெளிப்படையாக மேடைகளில் பேசி வருகிறார். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சிக்கிறார். தமிழ்நாட்டை கொள்ளையடித்த கூட்டம் திமுக என்றும் கபட நாடக வேடதாரிகள் திமுக என்றும் தொடர்ந்து பேசி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 13ம் தேதி தமிழக அரசு சார்பில் சென்னையில் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியல் களத்தில் பழைய எதிரிகள் புதிய எதிரிகள் என யார் வந்தாலும் அவர்களை சவால்விட்டு ஜெயிக்கும் வல்லமை பெற்றவர் ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டிப் பேசினார்.

அவர் அரசியல் களத்தில் திமுக எதிர்கொள்ளும் புதிய எதிரி விஜய் என்று மறைமுகமாக கூறியிருந்த நிலையில், அதற்கு நடிகர் விஜய் நேற்று நாகையில் உள்ள புத்தூர் அண்ணாசிலை அருகில் நடந்த கூட்டத்தில் சரியான பதிலடி தந்திருக்கிறார். அதுவும் ரஜினி பாணியில் கண்ணா என்று சொல்லி அவருக்கு சூசகமாக தனது பதிலை விஜய் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் விஜய் நாகையில் பேசியதாவது, இதே மீனவர் பிரச்னைக்காக இன்னைக்கு நேத்தா நான் குரல் கொடுக்கிறேன்? இதே நாகப்பட்டணத்துல 14 வருஷத்துக்கு முன்னாடி 2011ம் ஆண்டில் பிப்ரவரி 22ம் தேதி மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினோம் இல்லையா? இந்த விஜய் களத்துக்கு வர்றது ஒண்ணும் புதுசு இல்லே கண்ணா. எப்போ எப்போ எப்பவோ வந்தாச்சு.

என்ன அப்போ விஜய் மக்கள் இயக்கமாக வந்து நின்னோம். இப்போ தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் இயக்கமாக வந்து நிற்கிறோம். அவ்வளவுதான் வித்யாசம். அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி இனிமேலும் மக்களோடு மக்களாக தான் நிற்போம். இது புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி என்று நடிகர் விஜய் பேசியிருக்கிறார். இது திமுகவின் புது எதிரி என்று சொன்ன ரஜினிக்கு விஜய் தந்த பதிலாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்