- Advertisement -
Homeபொழுதுபோக்குநான்கு மணி நேரம் தம் கட்டி வேலையை பக்காவாக முடித்த விஜய், கோட் படத்தில்...

நான்கு மணி நேரம் தம் கட்டி வேலையை பக்காவாக முடித்த விஜய், கோட் படத்தில் இப்படி ஒரு சூப்பர் சம்பவம் நடந்திருக்கா? – அட இது வேற லெவல் ப்ரோ

- Advertisement -

நடிகர் விஜய் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் நடக்க இருக்கிறது. இதற்காக படக்குழு இன்னும் சில தினங்களில் ரஷ்யா புறப்பட்டுச் செல்ல இருக்கிறது. இந்த மாதம் 31ம் தேதியுடன் படப்பிடிப்பு முடிவடைகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு முன்பாக அவர் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில மாநாட்டை அதுவும் கட்சி பெயரை அறிவித்த பின் நடத்தப்படும் முக்கிய முதல் மாநில மாநாட்டை மதுரையில் நடத்துகிறார். வரும் ஏப்ரல் மாதம் அது நடக்க உள்ளது.

- Advertisement -

இந்த மாநாட்டில்தான் கட்சிக்கொடி, கட்சியின் முக்கிய கொள்கைகள், தீர்மானங்கள், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் போன்ற அனைத்து விவரங்களையும் விஜய், அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறார். இந்த விழாவில் ரஜினி, கமல், அஜீத் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட உள்ள விஜய், அடுத்து தனது 69வது படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதுவே அவரது கடைசி படமாக இருக்கும் என்றும் ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் அந்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் யார் என்பதில் இன்னமும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. 10 நாட்களில் முடிவு தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர் ஒரு பாடகி. கலைக்குழு வைத்து துவக்கத்தில் மேடைக்கச்சேரி நடித்த பாடிக் கொண்டு இருந்தவர். சினிமாவிலும் பல பாடல்களை பாடியிருக்கிறார். விஜயுடன், தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா, நான் தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா என, ஷோபா ஒரு படத்தில் பாடியிருந்தார்.

அதே போல் விஜய் தாய்மாமா, ஷோபா தம்பி எஸ்என் சுரேந்தர் மிகப் பிரபலமான பாடகர். அம்மா, மாமா போலவே, இசைக்குடும்பத்தை சேர்ந்த விஜயும் சிறந்த பாடகர்தான். அவரது பல படங்களில் அவர் பாடியிருக்கிறார். அவர் பாடிய பாடல் திரையில் வரும்போது இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என, திரையிலேயே அறிவிப்பு வருவது வழக்கம். அதே போல் கோட் படத்திலும் ஒரு பாடலை, யுவன் சங்கர் ராஜா இசையில் நான்கு மணி நேரம் செலவழித்து தம் கட்டி விஜய் பாடியிருக்கிறார். இந்த பாட்டு வேற லெவல் என்கின்றனர் கோட் படக்குழுவினர்.

- Advertisement -

சற்று முன்