- Advertisement -
Homeபொழுதுபோக்குகணிசமான வருமானத்துக்கு மற்றொரு சூப்பர் தொழிலை ஆரம்பித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - மீண்டும்...

கணிசமான வருமானத்துக்கு மற்றொரு சூப்பர் தொழிலை ஆரம்பித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – மீண்டும் கை கொடுத்து உதவிய பிரபல டைரக்டர்

- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஆரம்ப நாட்களில் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து, பிறகு அறிமுக நடிகராகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இப்போது டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இந்திய சினிமாவில் வலம் வந்துக் கொண்டு இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பிறமொழிகளிலும் அவருக்கான வரவேற்பு சிறப்பாக இருக்கிறது.

நடிகர் விஜய் சேதுபதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை ஏராளமான படங்களில் நடித்துக்கொண்டே இருந்தார். வருகிற படங்களை எல்லாம் ஒத்துக்கொண்டு நடித்தார். இதில் ஹீரோ, வில்லன், கேமியோ ரோல், கெஸ்ட் ரோல் என எந்த பாகுபாடும் பார்க்கவில்லை. ஆனால் இதுவே ஒரு கட்டத்தில் அவருக்கு வில்லங்கமாக மாறி விட்டது.

அவரை எந்த நிலையில் வைத்து பார்ப்பது என்றே ரசிகர்களுக்கு புரியவில்லை. சில நேரங்களில் ஹீரோவாக நினைத்து செல்லும் படங்களில் அவர் கேமியோ ரோலிலும், வில்லன் ரோலிலும் நடித்திருந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது. அதனால் அவர் பெரிய வெற்றியை எதிர்பார்த்த படங்களே மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. அதனால் கேமியோ, வில்லன் ரோல்கள் இனி இல்லை என்ற முடிவில் விஜய் சேதுபதி இருந்து வருகிறார்.

இந்நிலையில், சமீப காலமாக ஓடிடி தளங்களின் புழக்கம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி லைவ், ஜீ 5 என ஏராளமான ஓடிடி தளங்களின் வாயிலாக நேரடியாகவும் புதுப்படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன. தியேட்டரில் ரிலீசான படங்களும், ஓடிடி தளங்களில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெளியாகின்றன.

சமீபத்தில், டைரக்டர் சீனு ராமசாமி ஒன் பிளஸ் என்ற ஓடிடி தளத்தை புதிதாக துவங்கியிருக்கிறார். இதில் 800க்கும் மேற்பட்ட படங்களை ரசிகர்கள் காண முடியும். மற்ற ஓடிடி நிறுவனங்கள் மாதம் ரூ. 200 கட்டணமாக பெறுகிற நிலையில், இந்த ஒன்பிளஸ் ஓடிடி தளத்தின் மாத கட்டணம் ரூ. 29 மட்டும்தான். இந்த ஒன் பிளஸ் ஓடிடி தளம் துவக்க விழாவில், நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்று அதை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டைரக்டர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதியும் நீண்டகால நண்பர்கள். விஜய் சேதுபதிக்கு ஆரம்ப காலகட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்கள் மூலம் கை தூக்கி விட்டவர்தான் சீனு ராமசாமி. இந்நிலையில், ஒன் பிளஸ் ஓடிடி தளத்தின் உரிமையாளரே விஜய் சேதுபதி தான். சீனு ராமசாமியை முன்னிலைப்படுத்தி, இந்த ஓடிடி தளத்தை விஜய் சேதுபதி சொந்தமாக துவங்கியிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சற்று முன்