நடிகர் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அதுவும் அவரது 50வது படம் மகாராஜா படத்தில் நடித்த பிறகு, கம்பேக் கொடுத்து பழைய பொசிஷனுக்கு வந்துவிட்டார். இப்போது மீண்டும் அவருக்கான பட வாய்ப்புகள் பழையபடி அதிகரித்து வருகின்றன.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வந்த ராம்சரண், அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இப்போது அவரது 16வது படம், புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் புச்சி பாபு சனா என்ற இயக்குனர் டைரக்ட் செய்கிறார்.
இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியை, டைரக்டர் புச்சி பாபு சனா அணுகிய போது விஜய் சேதுபதி நடிக்க மறுத்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இதே டைரக்டர் இயக்கிய உப்பென்னா என்ற படத்தில், கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படம் 2021ம் ஆண்டில் வெளியானது.
இந்த படம் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில், மீண்டும் அதே இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கும் படத்தில், ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மறுத்திருப்பது, நல்ல வாய்ப்பை இழந்து விட்டாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதற்கான காரணம் என்னவென்று தெரிய வந்துள்ளது.
அதாவது உப்பென்னா படத்தில் கீர்த்தி ஷெட்டியின் தந்தை கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதே போல் ராம்சரண் நடிக்கும் படத்திலும் விஜய் சேதுபதிக்கு அதே தந்தை கேரக்டரையே தருவதாக கூறியிருக்கிறார். இப்படி தொடர்ந்து தந்தை கேரக்டரில் நடித்தால் தனக்கு அதுபோன்ற கேரக்டர்களையே திரும்ப திரும்ப தரும் நிலைக்கு இயக்குனர்கள் வந்து விடுவர்.
அதுமட்டுமின்றி தமிழில் பல இயக்குனர்கள் ஹீரோ கேரக்டரில் நடிக்கவே விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் தருகின்றனர். வில்லன் கேரக்டரில் நடிக்க மாட்டேன் என ஏற்கனவே விஜய் சேதுபதி அறிவித்து விட்டார். அதனால் தந்தை கேரக்டர் வேண்டாம் என இயக்குனர் புச்சி பாபு சனாவிடம் மறுத்திருக்கிறார். வித்யாசம் வேடம் என்றால் சொல்லுங்கள், கண்டிப்பாக நடிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். இப்போது விஜய் சேதுபதி நடிக்க மறுத்த கேரக்டரில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.





