- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை யாராவது விமர்சித்தால் கலாய்த்தால் எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கும் - விஜய் ரசிகர்களை கடுப்பேத்திய...

என்னை யாராவது விமர்சித்தால் கலாய்த்தால் எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கும் – விஜய் ரசிகர்களை கடுப்பேத்திய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

- Advertisement -

கடந்த 2017ம் ஆண்டில் விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் சீசன் துவங்கியது. தொடர்ந்து 7 ஆண்டுகள் அதாவது 2023ம் ஆண்டு வரை அந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். பிறகு அவர் ராஜ்யசபா எம்பி ஆன நிலையில், சினிமாவிலும் பிஸியாக இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து வந்த பணியை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார். 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் நடந்த பிக்பாஸ் சீசன் 8 பிக்பாஸ் சீசன் 9 ஆகிய 2 சீசன்களை வெற்றிக்கரமாக நடத்தி முடித்த நடிகர் விஜய் சேதுபதி இப்போது பிக்பாஸ் சீசன் 10ல் பங்கேற்று பேசி வருகிறார்.

- Advertisement -

விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக வந்த போது அவர் மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தது. நடிகர் கமல்ஹாசன் அளவுக்கு விஜய் சேதுபதிக்கு ஆழமாகவும் தெளிவாகவும் பேசத் தெரியவில்லை. சில இடங்களில் சொதப்புகிறார், தடுமாறுகிறார் என்றெல்லாம் விமர்சனம் வந்தது. ஆனால் நாளடைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நெளிவு சுளிவுகளை புரிந்துக்கொண்ட நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசத்திக்கொண்டு இருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் பட்டும் படாமல் பேசும் அதே நேரத்தில் சற்று நையாண்டித்தனத்துடன் கிண்டலடிக்கும் பார்மூலாவை பின்பற்றினார். போட்டியாளர்களின் செயல்களை கண்டிக்கும் போது கூட அதில் அதிக கடுமை காட்டாமல் ஒரு பக்குவப்பட்ட தன்மையை கமல்ஹாசன் ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தி அவரது அனுபவ முதிர்ச்சியை காட்டினார்.

- Advertisement -

ஆனால் விஜய் சேதுபதியை பொருத்த வரை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்கிற ரீதியில் படார் படார் என எதையும் முகத்தில் அடித்தது போல பேசுவது அவரது பாணியாக உள்ளது. அது வெளிப்படையாக ரசிக்க கூடியதாக இருப்பதாகவும் பிக்பாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர். லீடர்ன்னா என்ன என்று விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் இப்போது தவெக கட்சியினர் மத்தியில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஏதேச்சையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, என் மேல ஆயிரம் விமர்சனம் இருந்தது. போன வருஷம் பார்த்தீங்க இல்லே. என்னை கலாய்ப்பாங்க. எல்லாம் செய்வாங்க. எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கும். ஏன்னா அவங்க வேலையை எல்லாம் விட்டுட்டு என்னை கலாய்க்கிற வேலையை பார்க்கறாங்களே என்று சிரித்தபடி நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்