- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கவுண்டமணி கூட எல்லாம் என்னால் நடிக்க முடியாது - ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகர்...

நடிகர் கவுண்டமணி கூட எல்லாம் என்னால் நடிக்க முடியாது – ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சில படங்களில் துணை நடிகராக நடித்து பிறகு கதாநாயகனாக மாறியவர். இப்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 20 கோடி வாங்கும் அளவுக்கு சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய நட்சத்திர நடிகர்களில் மக்கள் செல்வனும் ஒருவர்.

இயக்குனர் கே பாக்யராஜால் அறிமுகம் செய்யப்பட்டவர் கவுண்டமணி. 16 வயதினிலேயே படத்தில் கூத்து வாத்தியார் கேரக்டரில் ரஜினியுடன் சில காட்சிகளில் நடித்தவர் கவுண்டமணி. இயக்குனர் பாரதிராஜாவிடம் வம்படியாக சொல்லி அதில் கவுண்டமணியை நடிக்க வைத்ததே அந்த படத்தின் உதவி இயக்குனர் கே பாக்யராஜ்.

- Advertisement -

அதன்பிறகு சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் பெட்டிக்கடை டெய்லர் காளியண்ணன் கேரக்டரில் கவுண்டமணி நடிப்பு பெரிய அளவில் கவனம் பெற்றது. அதன்பிறகு பல படங்களில் ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் சரத்குமார் விஜய் அஜீத்குமார் சிம்பு வரை பல நட்சத்திரங்களுடன் நடித்த காமெடி கிங் கவுண்டமணி.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் முதன் முறையாக குறிப்பிட்ட மணி நேரத்துக்கு கால்ஷீட் தந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியவர் கவுண்டமணிதான். அப்படி கடந்த 1980 90களில் கவுண்டமணி மிகவும் பிஸியாக இருந்தார். அவரது காமெடி காட்சிகள் இன்றும் டிரண்டிங்கில் இருந்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் பேசியதாவது, கவுண்டமணி சாருடன் நடித்த எல்லோரையும் நான் மிகச் சிறந்த நடிகர்களாக தான் பார்க்கிறேன். ஏனென்றால் அந்த காலத்தில் டிஜிட்டல் இல்லை. பிலிம் ரோல்தான். அப்படி இருக்கும் போது எப்படி அவர்கள் எல்லாம் அவருடன் சிரிக்காமல் நடித்தார்கள் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கவுண்டமணியுடன் நடிக்கும் காட்சிகளில் நானாக இருந்தால் அன்னைக்கு முழுவதும் அந்த சீனை எடுக்கவே முடியாது. நாள் முழுவதும் சிரிச்சுக்கிட்டே இருந்திருப்பேன். எனக்கு கவுண்டமணி சாரை அவ்வளவு பிடிக்கும். அவருடைய காமெடி பாத்துட்டு மத்தவங்க காமெடி பார்த்தால் சிரிப்பே வர மாட்டேங்குது என்று விஜய் சேதுபதி கவுண்டமணி குறித்து பெருமிதமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்