- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியலுக்கு வருவதற்கு முன்பு உங்கள் சொத்து எவ்வளவு? இப்போது சொத்து எவ்வளவு? வெளிப்படையாக சொல்ல முடியுமா?...

அரசியலுக்கு வருவதற்கு முன்பு உங்கள் சொத்து எவ்வளவு? இப்போது சொத்து எவ்வளவு? வெளிப்படையாக சொல்ல முடியுமா? – அரசியல்வாதிகளுக்கு நடிகர் விஜய் எழுப்பிய கேள்வி!

- Advertisement -

வேலூரில் உள்ள அகரம்சேரியில் இன்று நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, தூய சக்தி தவெகவுக்கும் தீய சக்தி திமுகவுக்கும் தான் இந்த போர். இந்த போரில் ஒன்றுக்கு உதவாத பால் டப்பாவை உருட்டிக்கொண்டு இந்த உல்ட்டா மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மாநிலம் சூப்பர் ஸ்டார் மாநிலம் என்கின்றனர். அதெல்லாம் கிடையாது.

வரக்கூடிய தடைகள் சூழ்ச்சிகள் அனைத்தையும் தாண்டி 2026 தேர்தலில் தவெக நின்று வெற்றி பெறும். இதுவரை நடந்த தேர்தல் வேறு. தற்போது நடக்கக்கூடிய தேர்தல் வேறு. ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை நடந்த தேர்தல் போல இதை நினைத்து விடாதீர்கள். 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கக்கூடிய தேர்தல் போன்றது. இது ஒரு அதிசய தேர்தல்.

- Advertisement -

தேர்தலில் எதிரிகளை தான் எதிர்ப்பார்கள். ஆனால் இந்த தேர்தலில் தான் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஒருவனை எதிர்க்கிறார்கள். இந்த விஜயை எதிர்க்கிறார்கள். ஏனென்றால் விஜய் ஊழலை லஞ்சத்தை எதிர்க்கிறான் என்ற காண்டு. அந்த காண்டு தான் ஒட்டுமொத்தமாக ஒருத்தனை எதிர்ப்பதற்கான காரணம். ஆனால் போட்டி இரண்டே இரண்டு பேருக்கு இடையில் மட்டும்தான்.

நம்மை யாரும் அசைக்க முடியாது. மக்களை நேசிக்கிற விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்துகிற ஸ்டாலின் வேண்டுமா? விஜயை நம்புகிறீர்களா? ஸ்டாலின் நம்புகிறீர்களா? இந்த தீய சக்தி ஊழல் சக்தி என யாரை சொல்கிறோம் என்பதெல்லாம் மக்களுக்கு நன்றாக தெரியும். அதே போல் திமுக தான் தவெகவுக்கு போட்டி என்பதும் மக்களுக்கு தெரியும்.

- Advertisement -

அப்படி இருக்கும்போது நான் ஏதாவது பேசினால் வான்டேட் ஆக வண்டியில் சிலர் ஏறிக்கொண்டு குரல் கொடுக்கிறார்கள். சீரியஸாக ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கும்போது காமெடிக்கு நேரம் இல்லை. இன்றைக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அரசியல்வாதிகளிடம் நான் ஒன்று கேட்க வேண்டும். நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக உங்களிடம் இருந்த சொத்து எவ்வளவு? அரசியலுக்கு வந்த பிறகு இன்று உங்களின் சொத்து எவ்வளவு? இதை உங்களால் ஓபன் ஆக பேச முடியுமா?

அப்படி வந்த காசு எல்லாம் உண்மையில் நீங்கள் உழைத்த காசா அல்லது ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு ஆட்டைய போட்ட காசா? இதைப்பற்றி எல்லாம் ஓபனாக உங்களால் பேச முடியுமா? இதையெல்லாம் நான் கேட்டால் அனைத்து ஊழல்வாதிகளும் ஒன்றாக சேர்ந்து நம் மீது சேற்றை வாரி வீசுவார்கள். அதை பற்றி எல்லாம் நமக்கு கவலை இல்லை. ஏனென்றால் நாம் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று நடிகர் விஜய் அந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்