- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க மனைவி செய்த பிரியாணி பிடிக்குமா, அம்மா செய்த பிரியாணி பிடிக்குமா? - திரிஷாவுடன்...

உங்க மனைவி செய்த பிரியாணி பிடிக்குமா, அம்மா செய்த பிரியாணி பிடிக்குமா? – திரிஷாவுடன் நேர்காணலில் பங்கேற்ற நடிகர் விஜய் சொன்ன அசத்தலான பதில் என்ன தெரியுமா?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். இன்று தமிழகத்தின் முதல்வராக இருந்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ளார். அரசியல் கட்சி துவங்கிய 2 ஆண்டுகளில் தமிழகத்தின் முதல்வர் பதவிக்கு வந்த ஒரே தலைவர் நடிகர் விஜய் மட்டும்தான்.

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படம் மூலம் 1992ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் 33 ஆண்டுகள் சினிமாவில் நாயகனாக நடித்தார். மொத்தம் 69 படங்களில் அவர் நடித்த நிலையில் அவர் கடைசியாக நடித்த ஜனநாயகன் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. வரும் 26ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

நடிகர் விஜய் பல நாயகிகளுடன் நடித்திருந்தாலும் நடிகை திரிஷாவுடன் தான் அதிக படங்களில் அவர் நடித்திருக்கிறார். கில்லி திருப்பாச்சி ஆதி குருவி மற்றும் லியோ ஆகிய 5 படங்களில் விஜய் திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். இதில் கில்லி திருப்பாச்சி படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. ஆதி குருவி படங்கள் சரியாக போகவில்லை.

ஆனால் லியோ படம் விமர்சன ரீதியாக எதிர்மறையாக பேசப்பட்டாலும் வணிக ரீதியாக வசூல் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் சினேகா நடித்த தி கோட் படத்தில் மட்ட என்ற பாடலுக்கு நடிகை திரிஷா விஜயுடன் நடனமாடி இருந்தார். முதன் முறையாக திரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியது விஜயுடன் மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒருமுறை நடிகர் விஜய் திரிஷா இணைந்து நடித்த ஒரு படம் ரிலீஸானது. அப்போது நடிகை அனுஹாசன் நேர்காணல் செய்த ஒரு டிவி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் நடிகை திரிஷா இருவரும் கலந்துக்கொண்டனர். அவர்கள் இருவரிடமும் தொகுப்பாளரான அனுஹாசன் கேள்விகளை கேட்டார். அப்போது உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்க விஜய் பிரியாணி என்றார். சிக்கன் பிரியாணியா, மட்டன் பிரியாணியா என்று கேட்க, மட்டன் பிரியாணி என்றார்.

அப்போது அம்மா செய்த பிரியாணி பிடிக்குமா, மனைவி சங்கீதா செய்த பிரியாணி பிடிக்குமா, என்று அனுஹாசன் ஒரு சிக்கலான கேள்வியை கேட்டார். அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று அருகில் அமர்ந்திருந்த திரிஷாவும் ஆர்வமாக விஜய் முகத்தை பார்த்தார். ஆனால் விஜய் கேஷூவலாக, என்னுடைய குக் பழனி செய்யற பிரியாணிதான் பிடிக்கும். பிரியாணி என்றால் ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் இருந்து சாப்பிடுவேன் என்று பதில் தந்து அசத்தியிருக்கிறார் இன்றைய முதல்வர் விஜய்.

- Advertisement -

சற்று முன்