- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார், நயன்தாரா உள்பட யாராக இருந்தாலும் அதை செய்துதான் ஆகணும், அது அவர்களது கடமை -...

அஜீத்குமார், நயன்தாரா உள்பட யாராக இருந்தாலும் அதை செய்துதான் ஆகணும், அது அவர்களது கடமை – பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர், பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. அவரது இயக்கத்தில் வெளிவந்த செம்பருத்தி, புலன் விசாரணை, மக்கள் ஆட்சி, கேப்டன் பிரபாகரன், பொன்விலங்கு, ராஜமுத்திரை, அதிரடிப்படை, அரசியல் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.

செம்பருத்தி படத்தில், ஆர்கே செல்வமணி இயக்கத்தில் நடித்த நடிகை ரோஜா, ஆர்கே செல்வமணியை காதலித்த நிலையில், இருவரும் 2002ம் ஆண்டில் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், ரோஜா சுற்றுலா துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது பெப்சி அமைப்பின் தலைவராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்து வரும் ஆர்கே செல்வமணி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் தமிழ் சினிமா குறித்த பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார். ஆர்கே செல்வமணி கூறியதாவது, ஒரு படத்தின் பட்ஜெட்டில், 30 சதவீதம் வரை நடிகர், நடிகைகளுக்கு சம்பளமாக கொடுத்தால், அந்த படம் நன்றாக வரும். 50 சதவீதம் சம்பளமாக போனாலும், ஓரளவு பரவாயில்லை. ஆனால் படத்தின் பட்ஜெட்டில் 90 சதவீதம் சம்பளமாக கேட்கும் தள்ளாடும் நிலையில், தமிழ் சினிமா இருந்து வருகிறது.

நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் பிரச்னையில் தயாரிப்பார் சங்கத்திடம் நடிகர் சங்கம் பேசியிருந்தால் பிரச்னை சுமூகமாக முடிந்திருக்கும். தனுஷ் மீது நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு பிரச்னை வந்திருக்காது. விஷால் தயாரிப்பாளர் சங்க பணத்தை எடுத்து முறைகேடாக செலவு பண்ணவில்லை என்றாலும், அதற்கான பொறுப்புடன் அவர் இருந்திருக்க வேண்டும்.

- Advertisement -

நடிகர்களை பொருத்தவரை, அவர்கள் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைய அவர்களது பங்களிப்பும், முயற்சியும் அவசியம் வேண்டும். அதனால் பெரிய நடிகர்கள், அவர்கள் நடித்த பிரமோசன் நிகழ்ச்சிகளில் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ரசிகர்கள் மத்தியில் அந்த படங்கள் குறித்த கவனமும், வரவேற்பும் அதிகரிக்கும்.

இந்த பிரமோசன் நிகழ்ச்சியில் அசோக் செல்வன் மட்டுமல்ல, அஜீத்குமார், நயன்தாரா உட்பட யாராக இருந்தாலும் கண்டிப்பாக கலந்துக்கொண்டு படத்தின் வெற்றிக்கு ஆதரவாக, பக்கபலமாக செயல்பட வேண்டும். இப்படி புரமோட் செய்வது அவர்களது கடமை. தமிழ் சினிமா இப்போது மோசமான நிலையில் உள்ளது. அதை காப்பாற்ற நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், முன்னணி நடிகர் ஒன்று திரண்டு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்று ஆர்கே செல்வமணி அந்த நேர்காணலில் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்