- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி நடிச்சா தான் அது ஹீரோயிசமா? நான் நடிச்ச பெரிய ஹீரோயிசம் அந்த படம்தான், அந்த...

அப்படி நடிச்சா தான் அது ஹீரோயிசமா? நான் நடிச்ச பெரிய ஹீரோயிசம் அந்த படம்தான், அந்த கேரக்டர்தான் – வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இதுவரை 68 படங்கள் அவரது நடிப்பில் வெளியான நிலையில் வருகிற 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் படம் 69வது படமாக வெளியாக உள்ளது. நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் விஜய், ஜனநாயகன் படத்துடன் சினிமாவை விட்டு விடை பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்கிய விஜய், வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிட்டு பெருவாரியான ஓட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று தமிழக முதல்வர் நாற்காலியில் அமரும் லட்சியத்தில் இருந்து வருகிறார்.

- Advertisement -

தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திமுகவை பாயாசம் என்றும் மத்தியில் ஆளும்கட்சியான பாஜக வை பாசிசம் என்றும் விமர்சித்து வருகிறார். தமிழகத்தை சேர்ந்த அதிமுக தேமுதிக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் விஜய்க்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை இன்னும் விஜய் அறிவிக்காமல் இருந்து வருகிறார்.

ஆனால் விஜய் தனித்து தேர்தல் களத்தில் நிற்பதுதான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரும் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். இதற்கிடையே விஜய் பங்கேற்று பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நண்பன் படத்தில் விஜய் நடிப்பு குறித்தும் விமர்சிக்கப்பட்ட நிலையில், அதற்கு விஜய் தகுந்த பதிலடி தந்திருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்த படம் நண்பன். கடந்த 2012ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் வழக்கமான சண்டை காட்சிகள் இருக்காது. வழக்கமான விஜய் படம் போல ஹீரோயிசம் இருக்காது. கமர்ஷியல் இருக்காது. நண்பர்களுக்குள் உள்ள நட்பை மட்டுமே இந்த படம் வெளிப்படுத்தி இருக்கும். கடைசி காட்சியில் விஜயை, ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் கீழே தள்ளி காலால் உதைப்பது போன்ற காட்சியும் வரும். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அப்போது நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் விஜய் கூறியதாவது, நான் நடித்த படங்களில் நண்பன் படத்தில் தான் மிகப்பெரிய ஹீரோயிசமே இருக்கிறது. அந்த கேரக்டரில் இருக்கிறது. 10 பேரை அடிச்சா தான் ஹீரோயிசம் கிடையாது. நண்பன் படத்தில் நான் நடித்த அந்த கேரக்டரில் அவ்வளவு பெரிய ஹீரோயிசம் இருந்தது என்று நடிகர் விஜய் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்