நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இப்போதைய சூழலில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகர் விஜய் மட்டும்தான். ஆனால் அவர் இப்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வாரிசு படம் வெளியான நேரத்தில் நடிகர் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சிலர் பேசியது பெரிய அளவில் கோலிவுட்டில் வைரலானது. 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார்.
இது பெரிய அளவில் பிரச்னையாக மாறிய நிலையில் ரஜினி விஜய் இருவருமே இந்த பிரச்னை குறித்து வெளிப்படையாக பேசி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர். ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே என்று நடிகர் விஜய் லியோ பட விழாவில் பேசினார். விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். அவரை போட்டியாக நினைப்பேனா, அது கனவிலும் நடக்காது என்று அதிரடியாக கூறினார்.
இந்நிலையில் ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியதாவது, என்னைவிட எத்தனையோ திறமையான நடிகர்கள் என்னைவிட அழகான எத்தனையோ நடிகர்கள் இதே லட்சியத்துடன் இருக்கின்றனர். கோல் போடற சந்தர்ப்பம் வருகிற போது அவர்கள் ஒவ்வொருத்தருமே சூப்பர் ஸ்டார்ஸ்தான்.
கோல் போடும்போது அந்த பந்து மட்டும்தான் வலைக்குள்ள விழணுமே தவிர நாம போய் அந்த வலைக்குள்ள விழுந்துடக் கூடாது. கிரீடம் எவ்வளவு கனமாக இருந்தாலும் அதை தாங்குகிற தலை கனமாக இருந்துடக் கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருக்கணும்.
வாழ்க்கையில் ஒண்ணே ஒண்ணு மட்டும்தான். வெற்றி தோல்வி என்பது வந்து வந்து போகும். முயற்சி அந்த முயற்சி மட்டும்தான் நிரந்தரமானது என்று அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் விஜய் பங்கேற்று பேசிய இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா நடிகர்கள் சூர்யா சிவகார்த்திகேயன் நடிகை நயன்தாரா இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலர் பங்கேற்று அவரது பேச்சை கைதட்டி ரசிக்கின்றனர். அந்த பழைய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.





