- Advertisement -
Homeபொழுதுபோக்கு‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்’ - மீண்டும் அறிக்கை வௌியிட்ட தமிழக வெற்றி கழகம்...

‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்’ – மீண்டும் அறிக்கை வௌியிட்ட தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்

- Advertisement -

நடிகர் விஜய் கடந்த 2ம் தேதியன்று முற்பகலில், திடீரென தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் 2 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதுதான் கடந்த 3 தினங்களாக சமூக வலைதளங்களில் அனல் பறந்துக்கொண்டு இருக்கிறது. எங்கு திரும்பினாலும், விஜய் அரசியலுக்கு வந்துட்டார், என்றுதால் பலரும் வியப்புடன் பேசுகின்றனர்.

மனித வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு போகும் நாணயத்துக்கும் இரு பக்கங்கள் உண்டு என்பதை போல, விஜய் அரசியலுக்கு வந்ததை பல பேர் பாராட்ட செய்கினறனர். பல பேர் விமர்சிக்க செய்கின்றனர். குறிப்பாக அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள், வெற்றி பெற்றவர்கள் போட்டிக்கு மீண்டும் ஒருவர் வந்து விட்டாரே, என்ற கோணத்தில்தான் பார்க்கின்றனர்.

- Advertisement -

விஜய் அரசியல் கட்சி பெயரை அறிவித்தது மட்டுமின்றி, எங்களது இலக்கு அடுத்த சட்டசபை தேர்தல்தான். 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, கப்பு முக்கியம் பிகிலு என்ற டயலாக் படி, முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவது என்ற இலக்கில் விஜய், அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார்.

முதலில் அப்பா கருணாநிதி, இப்போது மகன் ஸ்டாலின், அடுத்தது ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், அதன்பிறகு உதயநிதி மகன் இன்பநிதி என திமுகவினர் போட்டு வைத்திருந்த முதல்வர் நாற்காலி கணக்குக்கு விஜய், குறுக்கீடு செய்ய வந்துவிட்டது திமுகவினரை அப்செட் செய்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் மீண்டும் இப்போது தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். முதல் அறிக்கைக்கும், இரண்டாவது அறிக்கைக்கும் இடையில் ஒருநாள் தான் இடைவெளி என்பதில் இருந்தே,. விஜய் மிக வேகமாக, அரசியலில் கில்லி மாதிரி இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

அந்த அறிக்கையில், தமிழக மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தாய்மார்கள், சகோதர சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், ’என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்’ அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்’ என தெரிவித்துள்ளார். இதில் தனது ரசிகர்களை என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் என, கட்சித் தலைவராக விஜய் தனித்து குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்