தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்குபவர் கருணாஸ். நடிப்பை தாண்டி முக்குலத்தோர் புலிப்படை எனும் அரசியல் கட்சியையும் அவர் வைத்திருக்கிறார். கருணாசுக்கு ஆரம்ப காலகட்டத்திலேயே நல்ல பெயர் வாங்கி கொடுத்த திரைப்படம் நந்தா. அதில் லொடுக்கு பாண்டி எனும் கதாபாத்திரத்தில் நடித்து காமெடியில் பட்டையை கிளப்பி இருப்பார் கருணாஸ்.
இங்கிருந்து ஆரம்பித்த அவரது பயணம் தொடர்ந்து வெற்றிகரமாகவே சென்றது. ஏராளமான திரைப்படங்களில் நடித்து நகைச்சுவையில் பட்டையை கிளப்பினார் கருணாஸ். ஒரு திரைப்படத்தில் கருணாஸ் இருக்கிறார் என்றால் அங்கு நிச்சயம் காமெடி உறுதி என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு அதில் ஒரு ஷேப் இருந்தது.
சில திரைப்படங்களில் அவர் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். திண்டுக்கல் சாரதி என்னும் திரைப்படத்தில் கருணாஸ் ஹீரோவாக நடித்த அந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தில், சித்தப்பு கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.
அப்பாவியான அவரது குணச்சித்திர கதாபாத்திரம் பலரையும் இங்கு கவர்ந்தது. கருணாசை போலவே அவரது மகனும் திரைத்துறையில் நடித்து வருகிறார். கென் என்னும் அவர் அறிமுகமானது அசுரன் திரைப்படத்தில்தான். தனுஷின் மகனாக சிதம்பரம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கென். தந்தை பேச்சைக் கேளாமல் பக்குவம் இல்லாத சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.
தொடர்ந்து தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்திலும் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. கடைசியாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் கருப்பு என்னும் கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் வந்து போனார். இருப்பினும் அதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. இப்படியான சூழலில் கென் புதிதாக ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளி பின்னணியில் நடைபெறும் இந்த திரைப்படத்தில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு இதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோக மூன்று கதாநாயகிகள், கென் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்களாம். ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஜய் மகனைத் தொடர்ந்து கருணாஸ் மகனும் இயக்கத்தில் கவனம் செலுத்த இருப்பது பலரை எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது.





