- Advertisement -
Homeபொழுதுபோக்குவருகிற 2026 தேர்தலில் எந்த தளபதியை தேர்வு செய்யப் போறீங்க? - ஜெயலலிதா, ரஜினி பாணியில்...

வருகிற 2026 தேர்தலில் எந்த தளபதியை தேர்வு செய்யப் போறீங்க? – ஜெயலலிதா, ரஜினி பாணியில் குட்டிக் கதை சொன்ன நடிகர் விஜய்!

- Advertisement -

எப்போதுமே மேடையில் பேசும் அனுபவம் மிக்க பேச்சாளர்கள் பலரும், அவ்வப்போது பேச்சுக்கு இடையே குட்டியாக ஒரு கதை சொல்வார்கள். ஓரிரு நிமிடங்கள் முடிந்துவிடும் இந்த கதைகள் கேட்பதற்கு சுவாரசியமாக இருப்பது மட்டுமின்றி அதில் ஏதேனும் அரசியல் சார்ந்த சமூகம் சார்ந்த வாழ்க்கை சார்ந்த அனுபவ அறிவுரைகளும் கலந்திருக்கும். இதை ஞானிகளும் தங்களது சொற்பொழிவின் போது பின்பற்றுவார்கள்.

அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேடைகளில் பேசும்போது இதுபோன்ற குட்டிக் கதைகளை சொல்லி அசத்துவது வழக்கம். அதே போல் நடிகர் ரஜினிகாந்த் தனது பட விழாக்களின் போது இதுபோன்ற குட்டிக் கதைகளை சொல்லி அசத்தி விடுவார். இப்படி ஒரு காக்கா கழுகு கதை சொல்லப் போய்தான், அது விஜய்க்கும் ரஜினிக்கும் பெரிய பஞ்சாயத்தாக மாறியது ஒரு தனிக்கதை.

- Advertisement -

இந்த சூழலில் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜயும் ஜெயலலிதா ரஜினிகாந்த் பாணியில் மேடையில் குட்டிக் கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். நேற்று மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் அவர் சொன்ன குட்டிக்கதை இப்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகி வருகிறது.

நடிகர் விஜய் சொன்ன குட்டிக்கதை இதுதான். ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். தனக்கு பக்கபலமாக இருக்க ஒரு தளபதியை நியமிக்க ராஜா முடிவு செய்தார். சரியான 10 நபர்களை அதற்காக தேர்வு செய்தார். ஆனால் அதில் ஒருவரை தான் தளபதியாக தேர்வு செய்ய வேண்டும். ஆனால் 10 பேர் இருப்பதால் அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார். அதாவது அவர்களிடம் ஒரு நெல் விதையை கொடுத்து 3 மாதங்களில் அதை நன்றாக வளர்த்துக் கொண்டு வாருங்கள் என்று அவர்களை அனுப்புகிறார்.

- Advertisement -

அவர்கள் 3 மாதம் கழித்து வந்த போது அதில் ஒருவர் விதை நெல் ஆளுயரத்துக்கும் மற்றொருவர் தோள் உயரத்திற்கும் என ஒன்பது பேரும் நெல் விதையை நன்றாக வளர்த்து கொண்டு வந்தனர். ஆனால் அதில் ஒருவர் மட்டும் வெறும் கையுடன் வந்தார். என்னவென்று விசாரித்த போது, நானும் தண்ணீர் ஊற்றி ஊற்றி பார்க்கிறேன். நெல் வளரவே இல்லை என்று கூறுகிறார். உடனே ராஜா அவரை கட்டியணைத்து, நீதான் என்னுடைய தளபதி. எல்லா அதிகாரம் உனக்கு தான். நீதான் உண்மையாக நேர்மையாக நடந்து கொண்டாய் என்று பாராட்டுகிறார்.

அந்த 10 பேரிடமும் ராஜா கொடுத்தது அவித்த விதை நெல். அது ஒருபோதும் தழைக்காது. ஆனால் 9 முட்டாள்களும் அதை விட்டுவிட்டு வேறு நெல்லை வளர்த்து கொண்டு வந்து ராஜாவை ஏமாற்ற நினைத்திருக்கின்றனர். ஆனால் உண்மையான நபர் அப்படி செய்யவில்லை. இதேபோல் வருகிற 2026 சட்டசபை தேர்தலிலும் நீங்கள் எந்த தளபதியை தேர்வு செய்யப் போகிறீர்கள்? நல்ல தலைவனுக்கு அடிப்படை உண்மையாக இருப்பதுதான். அதனால் நீங்கள் எந்த தளபதியை நீங்கள் தேர்வு செய்யப் போகிறீர்கள் என்று பேசி அசத்தினார்.

- Advertisement -

சற்று முன்