- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் விஜயகாந்த் குடும்பத்தை மனம் குளிரச் செய்த நடிகர் விஜய், அரசியல்வாதி ஆகிட்டா இதை எல்லாம்...

கேப்டன் விஜயகாந்த் குடும்பத்தை மனம் குளிரச் செய்த நடிகர் விஜய், அரசியல்வாதி ஆகிட்டா இதை எல்லாம் செஞ்சுதானே ஆகணும் – தளபதி ரூட்டே வேற லெவல்தான்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது டாப் லெவல் நடிகராக உச்சத்தில் இருக்கிறார். தமிழ் சினிமா ஹீரோக்களில் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் விஜய்தான். அடுத்தகட்டமாக ரஜினிகாந்த் ரூ. 210 கோடி, அஜீத்குமார் ரூ. 200 கோடி தங்களது சம்பளம் என கூறி வருகின்றனர். அதே நேரத்தில் விஜய் தனது கடைசி படமான விஜய் 69 படத்துக்கு தனது சம்பளம் ரூ. 250 கோடி என தீர்மானித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், தமிழ் சினிமாவில் நடிக்க வந்த துவக்கத்தில் விஜய் சம்பளம், சில லட்சங்களில்தான் இருந்தது. அவரது அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படம் மூலம் விஜய், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துவக்கத்தில் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை. இயக்குனர் எஸ்ஏசி மகன் என்ற அடையாளம் மட்டுமே இருந்தது.

இந்த நேரத்தில், எஸ்ஏ சந்திரசேகர் கேட்டுக் கொண்டதால், கேப்டன் விஜயகாந்த் செந்தூரபாண்டி என்ற படத்தில் விஜய்க்கு அண்ணாக நடித்து, விஜய்க்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தார். சகல தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் விஜய்க்கு கவனமும், வரவேற்பும் கிடைத்தது. அதன்பிறகு அவர் நடித்த படங்களும், நல்ல கேரக்டர்களாக இருந்ததால் வெற்றி படங்களால் முன்னணி நடிகரானார்.

ஆனால் விஜய் வளர்ந்த பிறகு கேப்டனை கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக கேப்டன் மகன் ஷண்முக பாண்டியன் நடிக்க வந்த பிறகு, அவரது வளர்ச்சிக்கு உதவும் விதமாக நடந்துக்கொள்ளவில்லை என பலரும் விஜயை கண்டபடி விமர்சித்தனர். இந்நிலையில் தனது கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்து, அவருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காட்சிகளை பிரத்யேகமாக பார்த்து மகிழ்ந்த கேப்டன் குடும்பத்தினர், விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளனர். இப்போது விஜய் படத்தில் கேப்டனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால், பழைய வருத்தங்களை மறந்து, கேப்டனின் குடும்பம் விஜயுடன் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறது. அதனால், ஷண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் படத்தின் டீசரை, விஜயின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பிரமோவுக்கு உதவுமாறு கேப்டன் குடும்பத்தின் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

அப்போது விஜய், படைத்தலைவன் ஆடியோ ரிலீஸ் எப்போன்னு சொல்லுங்க, அதிலேயே நான் வந்து கலந்துக்கிறேன் என்று கூறி, பிரமேலதா, அவரது மகன்கள் விஜய பிரபாகரன், ஷண்முக பாண்டியன் உள்ளிட்டோரை திகைக்க வைத்திருக்கிறார். அதனால் மனம் குளிர்ந்து போன கேப்டனின் குடும்பம், விஜயை புகழ்ந்து வருகிறது. இதுபோன்ற விஷயங்களில் இனி நெளிவு சுளிவோடு நடந்துக்கொள்ள வேண்டும், மற்றவர்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை பெற வேண்டும் என்ற நிலையில், விஜய் நல்ல அரசியல்வாதியாக உருவாகி வருகிறார் என்கின்றனர் சினிமா, அரசியல் விமர்சகர்கள்.

சற்று முன்